பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

43



நடந்தவர் என்பவர் எவரும் கிடையாது. செய்த உதவிகளை நினைத்து உவப்படை யாத கீழ் மக்களுக்குக் கொடுத்த கொடையெல்லாம், இகழ்ந்து போன பொருள்களாகவே கருதப்படும்.

தமராலும் தம்மாலும் உற்றால்ஒன்று ஆற்றி நிகராகிச் சென்றாரும் அல்லர்--இவர்திரை நீத்தம்நீர்த் தண்சேர்ப்ப! செய்தது, உவவாதார்க்கு ஈத்ததை எல்லாம் இழவு."

உதவியின் பயனை அநுபவித்தும், அதனை உதவியவரின் செயலுக்கு நன்றி காட்டாத பயனற்ற மக்களுக்கு உதவுதல் கூடாதென்பது கருத்து. உவவாதார்க்கு ஈத்ததை எல்லாம் இழவு என்பது பழமொழி. - 86 87. கள்ளத்தை முகத்திலே காணலாம்

ஒளிபொருந்திய அமர்த்த கண்களை உடையவளே! ஒருவர், எவ்வளவுதான் பிறர் அறியாத வகையாகத் தம் கள்ளத் தனத்தை மறைத்தாலும், அவருடைய உள்ளத்திலே நிலவுவதை அவர் முகமானது பிறருக்கு எடுத்துச்சொல்லிவிடும்.அதனால், வெள்ளம் வருகின்ற காலத்திலே அது வருமிடம் எங்கும் ஈரம் பட்டுவிளங்குவதைப்போலக்கள்ளமான எண்ணம் உடையவர் களையும், அவர்களைப் பார்த்த அளவாலேயே அறிந்து கொள்ளலாம்.

வெள்ளம் வருங்காலை ஈரம்பட்ட டஃதேபோல் கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம் ஒன்அமர் கண்ணாய் ஒளிப்பினும், உள்ளம் படர்ந்ததே கூறும் முகம். . . உள்ளத்தில் உள்ளதை முகம் காட்டிவிடும். ஆதலால் எவரும் உள்ளத்தில் தூய்மை உடையவராகவே வாழ்தல் வேண்டும் என்பது கருத்து.'உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்’ என்பது பழமொழி. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதும் நினைக்க 87 88. கீழோர்க்கு உபதேசிப்பதும் ஆபத்து

தேரின் உள்ளே தானே இருந்து கொண்டு, ஒருவன் தானே அதனுடைய அச்சாணியைக் கழற்றி எறிந்து விடுதல்,தேருடன் அவனுக்கும் அவனே அழிவைத் தேடிக் கொள்வதாகும். தாம் கூறுகின்ற சொற்களை ஏற்றுக் கொண்டு தம்மைப் போற்றி நடக்காதவர்களாகக் கல்லால் எறிந்தாற் போலக் கடுஞ்சொற்