பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

பழமொழி நானூறு மூலமும் உரையும்



களைப் பேசி பகைமையை மேற்கொள்ளும் கீழ்மக்களை, அவர் களுடைய வீட்டிலேயே இருந்துகொண்டு, அவர் செயலுக்காக அவர்மீது இரங்கிப் பேசி, அவருக்குக் கோபம் வருமாறு செய்தலும், அப்படிப்பட்ட அறியாமையான செயலேயாகும்.

சொல்லெதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய் கல்லெறிந்தாற் போலக் கலாந்தலைக் கொள்வாரை இல்லிருந் தாற்ற முனிவித்தல், உள்ளிருந்து அச்சாணி தாம் கழிக்கு மாறு. 4 தியோரால் ஒரு செயலைச் செய்துகொள்ளக் கருதும் - அறிவுடையோர், தம் செயல் நிறைவேறும் வரைக்கும், அவர் களைகோபமூட்டும்வகையாக எதுவுமே பேசக்கூடாது என்பது கருத்து. ‘உள்ளிருந்து அச்சாணி தாம் கழிக்கு மாறு’ என்பது பழமொழி. - - - 88 89. வரும் சிறப்பு தவறாது வரும்

'கழுமலம்' என்னும் இடத்திலே கட்டப்பட்டிருந்த களிற்று யானையும், கருவூரிலே இருந்த சிறப்புடையோனாகிய கரிகால் வளவனிடத்தே சென்றது. அவனைக் கொண்டுவந்து சோழ நாட்டிற்கு அரசனாகவும் ஆக்கிற்று. அதனால், சிறந்த பொருள்கள், தம்மை ஒருவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அடைதற்குரியதான முன்வினைப்பயன் உள்ளவனைத் தாமே வலியச் சென்று அடையாமற் போவது அருமையாகும்.

கழுமலத்தில் யாத்த களிறும், கருவூர் விழுமியோன் மேற்சென்றதனால்--விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது. 'நல்ல சிறப்பு வரும் ஊழ்வினை இருந்தால், அது எப்படியும் வந்தே தீரும் என்பது கருத்து. ‘உறற்பால தீண்டா விடுதல் அரிது’ என்பது பழமொழி வருவது வந்தே தீரும்’ என்பதும் இது. 90. வரவேண்டிய துன்பம் தவறாமல் வரும் *. பொங்கிப் பெருகிவந்து கற்பாறையினிடத்தே பாய்கின்ற, அருவிகள் அழகு செய்யும் மலைநாட்டிற்கு உரியவனே அழகிய இடமான வானத்திலிருந்து பரந்த நிலவுக் கதிர்களைப் பொழிந்து உதவும் திங்களும் இராகு கேதுக்களால் தீமை அடைவதைப் பார்க்கின்றோம்! அதனால், வரக்கடவதான