பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

45



துன்பங்கள் எவ்வளவு சிறந்தோர்க்கும் தவறாமல் வந்தே சேரும்

என்று அறிவாயாக - t

அங்கண்விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் தீங்குறுதல் காண்டுமால்-பொங்கி

அறைப்பாய் அருவி அணிமலைநாட! உறற்பால யார்க்கும் உறும்.

உயர்வுட்ைய சான்றோரும் ஒவ்வோர் சமயத்தே துன்பத் திற்காளாவது அவருடைய ஊழ்வினைப் பயன் என்பது கருத்து. அறை பாறை உறற்பால யார்க்கும் உறும் என்பது பழமொழி. 'வினை வீயாது பின்சென்று அடும்’ என்பதும் நினைக்க, 90

91. தீயவனை ஊரே அறியும் -

ஊரிலே அறியப்படாத பொலிகாளை என்பது எங்குமே கிடையாது.அதுபோலக், கூர்மையான அறிவுடையவர்களிடத் திலே சென்று நல்ல பண்பு உடைய அவர் அறிவுரைகளைக் கேட்டுப் பயன் பெறாது, தம்மிடமுள்ள இருண்ட அறிவான புல்லறிவினையே தம்வாழ்விற்குப்பற்றுக்கோடாகக் கொண்டு கடிதான செயல்களையே செய்தொழுகும் முரடர்களின் பெயரை அறியாத அறிவிலிகளும், நாட்டிலே யாருள்ளனர்?

கூரறிவினார் வாய்க் குணமுடைச்சொல் கொள்ளாது

காரறிவு கந்தாக்கடியன செய்வாரைப்

பேரறியார் ஆயின பேதைகள் யாளுளரோ? ஊரறியா மூரியோ இல்.

மூரி-கட்டுக்கு அடங்காது அலையும் கொழுத்த எருது. அவர் போலப் புல்லறிவாளரும் கட்டுக்கடங்காது தலை நிமிர்ந்து செருக்கித்திரிவார்கள் என்பது கருத்து.அவர் தொடர் பைக்கைவிடல் வேண்டும் என்பது முடிவு.'ஊரறியா மூரியோ இல் என்பது பழமொழி.இவரை ஊரே அறியும் என்பதும் கூறப் பெற்றது. 91 92. சாவை நினைத்து, தருமத்தை உடனே செய்க

அவர்கள் இல்லாமல், தாம் அமைவதே இயலாத சிறப்புடையவரான, இருமுது குரவராகிய தாய் தந்தையர் களும்கூடத் தம்மை விட்டுப் போய்விட்டதனைக் கண்டும் இவ்வுலகத்து வாழ்வை நிலையான ஒரு பொருளாக அறிவுடை யோர் கொள்வார்களோ? அதனால், பொருத்தமான வகையி னால் எல்லாம் க்ாலத்தால் தருமங்களைச் செய்வீர்களாக.