பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

பழமொழி நானூறு மூலமும் உரையும்



குன்றமானது ஊர்ந்து உருண்டு செல்லத் தொடங்கி னால் அதன்வழியைத் தடுப்பது எதுவுமில்லை.அதுபோலவே, சாவு வருங்காலத்தும் அதனை வராது தடுப்பது எதுவும் இல்லை.

இன்றியமையா இருமுது மக்களைப் பொன்றினமை கண்டும் பொருளாக் கொள்பவோ ஒன்றும் வகையான் அறஞ்செய்க, ஊர்ந்துருளின் குன்று வழியடுப்ப தில். உடலின் நிலைமையான தன்மை கூறி, அறம் செய்த்ல் வற்புறுத்தப்பட்டது."ஊர்ந்துருளின் குன்று வழியடுப்பதில்’ என்பது பழமொழி, சாவும் அவ்வாறு தடுக்கவியலாதது என்பது கருத்து. 92 93. போர்வீரரின் முனைப்பு .

ஆராய்ந்து பார்க்குமிடத்திலே, காட்டிலிருந்து தவம் செய்யும் அமணர்க்கும், ஒட்டால் வரும் பயன் எல்லாம் பலர் உறையும் ஊரினிடத்ததாகவே விளங்கும்."மாலை பொருந்திய பெரிய மார்பினையுடைய அரசன் குறித்து நோக்கியபோதே, போரை ஏற்றுச் செல்வோம்” எனத் தறுகண்மை பேசுபவர்கள், 'அவன் பொதுவாகவே நோக்கினான்; நம்மைக் குறிப்பிட்டு நோக்கவில்லையே' என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். யாவர் மேற்றாக அவன் பார்த்தாலும், அதனைத் தம்மேலே யாக நோக்கினான் என்று கருதி அச்செயலை முடிக்கச்சொல்வதே சிறப்பு

தாரேற்ற நீண்மார்பின் தம்மிறைவன் நோக்கியக்கால் போரேற்றும் என்பார் பொதுவாக்கல் வேண்டுமோ? யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக் காணுங்கால் ஊர்மேற்றதாம் அமணர்க்கு ஒடு. ஒடேந்தி அமணர் சென்றால் ஈகைப்பயன் உணர்ந்தவர் தாமே வந்து மனதார இட்டுச் செல்வது போல, வீரர்கள் ப்ோரிலே தம் கடனாகவே எண்ணித் தம் கடமையைச் செய்ய, அதனால் அரசனும் வெற்றி பெறுவான் என்பது கருத்து.'ஊர் மேற்றதாம் அமணர்க்கு ஒடு’ என்பது பழமொழி. 93

94. துன்பத்திற்கு அஞ்ச வேண்டாம்

ஆண் யானையானது பணியால்வரும் துயருக்கு அஞ்சித் தன் பிடியினைத் தழுவிக்கிடக்கும் மூங்கில்கள் சூழ்ந்த மலைநாடனே தன் ஊழ்வினைப் பயனால் தன்னை நோக்கி வரும் அம்பு ஒருபோதும் குறிதவறி நிலத்திலே வீழ்வதில்லை.