பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

பழமொழி நானூறு மூலமும் உரையும்



எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக் கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல்--சொல்லின் நிறைந்தார் வளையினாய்! அஃதால், எருக்கு மறைந்துயானை பாய்ச்சி விடல்.

அவன் உயரிழப்பது உறுதியாவதுபோல, பெரியோர் வெறுத்துப் பேசும் அறிவிலிகளும் அழிவது திண்ணம் என்பது கருத்து. எருக்கு மறைந்து யானை பாய்ச்சி விடல் என்பது பழமொழி, எருக்கந்தூரில் இருப்பவனை யானை எளிதாக மிதித்து விடுவதுபோல அறியாமையாளரும் அழிக்கப்படுவர் என்பது கருத்தாகும். 96 97. பகை மன்னரிடை உறவு

போர்ச் செருக்கினையுடைய மன்னர்கள் இருவர்களி டையே ஒருவன் புகுந்து அவருள் ஒருவருக்கு உதவாத செய்தியைச் சொன்னான் என்றால், அதனைக் கேட்டு அவர்கள் சீறி எழுவர். அதனைத் திருத்துவதற்குத் தனக்கும் முடியாமற் போக, அது முடிவில் சொன்னவனுக்கே தீமையாய் முடியும். இரண்டு எருதுகளின் நடுவே இட்டிருக்கும் வைக்கோலைத் தின்னப்புகும் மோழை மாடு, அவை இரண்டாலும் குத்தப் பட்டுத்துன்பம் அடைவதின்றிவைக்கோலைத்தின்னமுடியாத வாறு போலவே, அவன் கதியும் பயனற்றுத்துன்பமாக முடியும்.

செருக்கு உடைய மன்னர் இடைப்புக்கு அவருள் ஒருத்தற்கு உதவாத சொல்லின் தனக்குத் -

திருத்தலு மாகாது தீதாம்; அதுவே எருத்திடை வைக்கோல் தினல்.

பேரரசர்கள் இடையே புகுந்து இருவருக்கிடையிலும் இலாபம் பெற ஏதாவது சொல்பவன் மிகவும் விழிப்பாயிருக்க வேண்டும் என்பது கருத்து. இருவராலும் அவனுக்குக் கேடு விளையக்கூடும் என்பதாம். எருத்திடை வைக்கோல் தினல்’ என்பது பழமொழி - 97 98. இன்சொல்லின் சிறப்பு - -

உடுக்க உடையும், நோய்க்கு மருந்தும், தங்குவதற்கு இருப்பிடமும், உண்ண உணவும் இவற்றோடு இன்ன பிறவும் பிறருக்குக் கொடுத்து, அவர் குறைகளைத் தீர்த்தலான செயல் களைச் செய்து, அவரை அனுப்பிவைத்து, அவர்பால் இனிமை யான சொற்களை மட்டும் சொல்லாமல் இருப்பது மிகவும் தவறாகும். அது, எருமையைக் கொன்று சமைத்து விருந்து