பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

49



வைக்கத் தொடங்கும் ஒருவர், அதற்குரிய மசாலைப் பொருள் களுக்குக் கஞ்சத்தனம் செய்வதுபோன்றதாகும். -

உடுக்கை மருந்து உறையுள் உண்டியோடு இன்ன கொடுத்துக் குறைதீர்த்தல் ஆற்றி--விடுத்தின்சொல் ஈயாமை என்ப, எருமை எறிந்தொருவர் - காய்க்கு லோபிக்கும் ஆறு.

எல்லாக்கொடையிலும், இன்சொல் வழங்குதலே சிறப்பு டையது என்பது கருத்து. ‘எருமை எறிந்தொருவர் காய்க்கு லோபிக்குமாறு’ என்பது பழமொழி இன்சொல் வழங்காத கொடைமதிப்பிழக்கும் என்பதும் கருத்தாகும். 98 99. அடைந்தவர் வறுமையைப் போக்க வேண்டும் - தம்மைச் சேர்ந்தவர் ஒருவரை, அவரால், சேர்ந்து ஒழுகப் பட்டவர் முடிந்த உறவினராகக் கொண்டு நடந்தாலும், ஆராய்ந்து அவரை விட்டுப் போகாத வறுமையினைக் கண்டு, அதுபோவதற்கு வேண்டியவற்றைச்செய்ய வேண்டும்.அப்படிச் - செய்யாதவிடத்து, அவர் செல்லும் நெறிவேறு என்ன உண்டாகு மோ? யாவரும் சமைத்து உண்ணும் உணவிற்கு ஆவன செய்வதே உண்மையான முயற்சியாகும் பிறவெல்லாம் பொய்யான செயலே.

சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்தொழுகப்பட்டவர் தீர்ந்தாராக் கொண்டு தெளியினும்--தேர்ந்தவர்க்குச் செல்லாமை காணாக்கால் செல்லும்வாய்

என்னுண்டாம் எல்லாம்பொய் அட்டுணே வாய். .

உதவுவார் என அடைந்த ஒருவர் உதவாவிட்டால் அப்படி அடைந்தவர் அவரைவிட்டுத் தாமே தம் முயற்சியில் ஈடுபட வேண்டுமேயல்லாமல், அவரையே தொங்கிக் கொண்டு இருப் பது கூடாது என்பது கருத்து. எல்லாம் பொய் அட்டுணே வாய்' என்பது பழமொழி. 99 100. அரசனுக்குக் கோபம் வரும் செயல் .م

வெம்மையான சினத்தையுடைய அரசனானவன், தான் விரும்பாத ஒன்றையே தனக்குச் செய்தாலுங்கூட, அவனை யடுத்து வாழ்பவர், அதனைத் தம் நெஞ்சத்துட் கொண்டு பகைகொள்ளும் செயலைச் சிறிதுகூடச் செய்தலே வேண்டாம். என்ன தீவினைகளைச்செய்து அகப்பட்டுக்கொண்டபோதும், எவரேனும் தூங்கும் புலியைத் துயில் எழுப்புவார்களோ?