பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

51



இனநலம் நன்குடைய ாயினும், என்றும் மனநலம் ஆகாவாம் கீழ்.

'நல்லவர் தொடர்பினாலும் கீழோர் திருந்த மாட்டார் கள் என்பது கருத்து. என்றும் மனநலம் ஆகாவாம் கீழ் _ என்பது பழமொழி. அவர்கள் மனம் கீழ்மைப் போக்கிலேயே செல்லும் என்பதாம். . r 102 103. கெடுக்க முயன்றவன் நண்பனானால்...? -

நீலோற்பல மலர்கள் என்று கருதிய வண்டினம், உண்மை யான பூக்களைக் கைவிட்டுப் பக்கத்திலே மொய்த்துக்கொண்டி ருக்கின்ற கண்களை உடையவளே! ஒருவன் ஒருவனை நலிந்து கெடுப்பதற்குநாள்தோறும் சென்றான்.அதனால்,அந்த ஒருவன் தளர்ச்சியுற்றுவீழ்ந்துவிடாமல் இருப்பதைப்பார்த்தான் பின்பு அவனோடு மிகவும் நட்புடையவனாகச் சென்று சேர்ந்தான்; இப்படிச் சேர்வது அம்பினால் எய்து ஒருவனைக் கொல்ல முயன்றவன், எய்யப்பட்டவன் அதற்குத் தப்பிவிட, அவனைப் பின்னர் தனக்குக் காவலாகக்கொள்வதுபோன்றதாகும்.

நலிந்து ஒருவர் நாளும் அடுபாக்குப் புக்கால் மெலிந்து ஒருவர் விழாமை கண்டு--மலிந்தடைதல் பூப்பிழைத்து வண்டு புடையாடும் கண்ணினாய்! ஏப் பிழைத்துக் காக்கொள்ளு மாறு.

ஒருவனைக் கெடுக்க முயன்று முடியாமல் போக, அவனுடன் நண்பராக முயல்பவர், என்றும் அந்தக் கெட்ட எண்ணத்துடனேயே இருப்பார்கள்.அவர்கள்தொடர்பு அறவே கூடாதென்பது கருத்து.'ஏப்பிழைத்துக் காக்கொள்ளுமாறு’ என்பது பழமொழி. தன்னால் வெல்லமுடியாத ஒருவனைத் தனக்குக் காவலாகக் கொள்வது இயல்பு என்பதும் ஆகும். 103.

104. ஆட்சித் தலைவனைக் கோபித்தல்

காட்டுப் பசுக்கள் திரிந்து கொண்டிருக்கும் அழகிய மலைகளுக்கு உரிய வெற்பனே! கேட்பாயாக. தாமாகவும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள், தாவிப் பாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேரினை உடைய மன்னரைக் கோபித்துக் கொள்வது எதற்காகவோ? கோங்க மரத்திலே ஏறினவர் என்றும் பாதுகாப்புடன் இருக்க முயன்றாலும், எக்காலத்தும் தம் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாதவர்களேயாவர்

தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாதார் வாமான்தேர் மன்னரைக் காய்வது எவன்கொலோ?