பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

பழமொழி நானூறு மூலமும் உரையும்



ஆமா உகளும் அணிவரை வெற்ப! கேள் ஏமரார் கோங்கு ஏறினார்.

கோங்க மரத்தில் ஏறினால் கிளை முறிந்து வீழக்கூடும்; அவர் செயல்போலவே, வலியுடைய மன்னருக்குச் சினம் உண் டாக எப்போதாவது பேசிய வலியற்றவர்களும், அவரால் அழிக் கப்படுவார்கள். ஆதலின் அப்படிச் செய்வது தவறு என்பது கருத்து.'ஏமரார் கோங்கு ஏறினார்’ என்பது பழமொழி. 104 105. ஏவலாளனுக்குப் பொறுப்புக் கிடையாது

மின்னலைப்போல விளங்கும், நுண்மையான இடை யினை உடையவளே! ஒருவனால்.ஏவி விடப்பட்ட ஏவலாளன் ஒரு ஊரையும்கூட அவன் ஏவினால் சுட்டுப் பொசுக்கி விடுவான். அதற்கு, அவனை ஏவினவனை நோக வேண்டுமே அல்லாமல் அவனை நோவதனால் ஒரு பயனும் இல்லை. அதுபோலவே,“முன்பிறவியிலேயே யாம் ஆத்திரங்கொண்டு செய்த பழைய வினைகள் தொடர்ந்து வந்து இன்று எம்மை வருத்துகின்றது”என்ற உண்மையைச் சிந்தித்துஅறியாதவர்கள், தம்மை துன்பபப்படுத்தும் பகைவர்களை, அது அவர்கள் செயலாகக் கொண்டு நொந்து கொள்வது எதற்காகவோ?

பண்டுஉகுத்துச் செய்த பழவினை வந்ததெம்மை இன்றுஒறுக் கின்ற தெனவறியார்-துன்புறுக்கும் மேவலரை நோவதென்? மின்னேர் மருங்குளாய்! ஏவலாள் ஊருஞ் சுடும்.

பகைவரால் நேரும் துன்பம் எல்லாம் நம் பழவினைப் பயனால் வந்தனவென்றே கருத வேண்டும். அவர்கள் ஊழ் வினையின் ஏவலைச் செய்பவர்களேதான் என்பது கருத்து. 'ஏவலாள் ஊருஞ் சுடும் என்பது பழமொழி.எய்தவன் இருக்க அம்பை நோவதேன் என்பதும் இது. 105 106. குடிப்பிறப்பின் பண்பு குறையாது - -

நல்ல எருதுக்குப்பிறந்த ஒரு கன்றானது.வளர்ப்போனால் மிகுதியும் பேணப் படாததாகித் தின்னும் புல்லும் சரிவரக் கிடைக்கப் பெறாமல் எதை எதையோ மேய்ந்து கொண்டிருந் தாலும், பின்னர், உறுதியாக நல்லதொரு எருதாகி விடும்; . அதுபோலவே, நல்ல குடியிலே பிறந்த சான்றாண்மை உடையவன், தான் தேடித் தொகுத்த சிறந்த பொருள்கள் யாதும் தன்னிடத்தே இல்லை என்றாலும், தன் குடிப்பண்பின் காரணமாக உபகாரம் செய்பவனாகவே இருப்பான்.