பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

பழமொழி நானூறு மூலமும் உரையும்



மறையாது இனிதுஉரைத்தல் மாண்பொருள் ஈதல் அறையான் அகப்படுத்துக் கோடல்-முறையால் நடுவணாச் சென்றவரை நன்கறிதல் அல்லால் ஒடியெறியத் தீராப் பகை. ஒடி எறிதல்-பாதி வெட்டியும் வெட்டாமலும் வைத்தல். சாம, தான, பேத, தண்டம் என்னும் நான்கு வகை உபாயங்க ளாலும் பகைவரைப் போக்குவது பற்றிக் கூறியது இது. 'ஒடியெறியத் தீராப் பகை' என்பது பழமொழி. முற்றவும் அழியச்செய்யவேண்டும் என்பது கருத்து 108

109. தாயும் அரச நீதியும்

செல்லவர்களுக்கும்.வறுமையாளர்களுக்கும்.அவரவர்க்குச் செய்யும் முறைமைகளைத் தெரிந்து, அதனின்றும் வழுவாமல் இருவருக்கும் நேர் சமமாகவே அரசன் பாரபட்சமில்லாமல் நீதி செலுத்த வேண்டும். அரச முறையிலே மாறுபட்டு, நேராக அவன் நடக்கவில்லையென்றால், ஒரு பக்கம் ஒரு பிள்ளைக்கு நீரும், அடுத்த பக்கம் அடுத்த பிள்ளைக்குப் பாலும் ஒரு பெண்ணுக்குச் சுரப்பதுபோன்றதாகும். -

முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும் இறைதிரியான் நேரொக்க வேண்டும்--முறைதிரிந்து நேரொழுகா னாயின் அதுவாம், ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு. -

தன் குடிகளிடையே பாரபட்சம் கற்பித்து நீதிதவறுதல், அரசனுக்கு மிகவும் பழிதரும் செயலாகும்.நீதியின் முன் ஏழை யையும், பணக்காரனையும் சமமாகவே பாவிக்க வேண்டும். "ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு’ என்பது பழ மொழி.இப்படிநடப்பது தவறு என்பது கருத்து. 109 110. நண்பர் தீங்கினைப் பொறுத்தல் -

கரையோடு பொருதலான அலைகள் வந்து உலவுகின்ற பொங்கும் நீர்வளத்தினையுடைய சேர்ப்பனே!ஒருவர் பொறுக் கும்பொறுமையானது.இருவரின் நட்புக்கும் உதவியாகும்.நட்புச் செய்தவர்களுக்குத்தம்மால்செய்யப்பட்டதொருதீமை எதுவும் இல்லாதவர்கள், தமக்கு நண்பர்கள் செய்யும் தீமையையும்,"எம் தீவினைப் பயனால் வந்துற்றதே இது’ என்று நினைத்து அதனைப் பாராட்டாது பொறுத்துக் கொள்ளவே செய்வார்கள்.

தம்தீமை இல்லாதார் நட்டவர் தீமையும் எம்தீமை என்றே உணர்வதாம்-அந்தண்