பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

55



பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப - ஒருவர் பொறைஇருவர் நட்பு. _ நட்பில் பிழை பொறுத்தல் இல்லாதபோது இது நிலையாது என்பது கருத்து. ‘ஒருவர் பொறைஇருவர் நட்பு’ என்பது பழமொழி. - - 110 111. வஞ்சிக்கவும் செய்யலாம்

நெருக்கமாகக்கட்டப்பெற்றுள்ளமாலையினை அணிந்தி ருக்கின்ற வேந்தனானவன், செவ்வையில்லாத ஒரு செயலிலே ஈடுபடமாட்டான் என்றால், அறிவுடையவரான அவன் அமைச்சர்கள், பொய்யுரைத்து அவனை வஞ்சித்தாயினும், அவனை அதனின்றும் நீக்கவே முயலுவார்கள். சந்திரனைக் காட்டி, அதன்மேல் இல்லாததெல்லாம் பழி சொல்லிப் பிள்ளைகளை மருட்டும் தாய்மார்களைப்போல என்க. ஒள்ளியவனான நெறிகளை இன்னபடியென்று காட்டாத, அவன் விருப்பப்படியே சார்ந்து நடப்பவர்களுக்கு, அப்படிச் செய்தல் என்பது அரிதாகும். - செறிவுடைத் தார்வேந்தன் செவ்வியல பெற்றால் அறிவுடையார் அவ்வியமும் செய்வர்-வறிதுரைத்துப் பிள்ளை களைமருட்டும் தாய்போல் அம்புலிமேல் ஒள்ளியகாட் டாளர்க்கு அரிது.

ஆட்சியிலுள்ளார் தவறான செயல்களில் ஈடுபட்டால், அறிவுடையார் பொய்யுரைத்து மருட்டியாயினும், அவரைத் திருந்தும்படிசெய்தல் வேண்டுமென்பது கருத்து."ஒள்ளிய காட் டாளர்க்கு அரிது’ என்பது பழமொழி. - 111 112.தம்மவராயினும் தண்டித்தல்

தம்முடைய கண் போன்றவர்களானாலும், அவர்கள் தகுதியில்லாத செயல்களைச்செய்தலைக்கண்டால், இவர் எம் கண் போன்றவர் எனக் கருதி அதனைப் பாராட்டாது விட்டு விடுதல் அரசநெறிக்குக்குற்றம் தருவதாகும்; அதனால் வன்கண் மை உடையவனாகத் தன்னைச் செய்து கொண்டு, அரசன், அத்தகையவர்களையும் அரசநெறிப்படிமுறையே தண்டிப்பா னாக; அப்படித் தண்டிக்க மாட்டாத கண்ணோட்டம் உடையவனான ஒருவன்,தன் அரசாட்சியினைச் செவ்வையாக ஒருபோதும் நடத்தவே மாட்டான்.

எங்ங்ண் இணையர் எனக்கருதின் ஏதமால்; தங்கண்ணார் ஆயினும் தகவில கண்டக்கால்,