பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

பழமொழி நானூறு மூலமும் உரையும்



நாடுக தான்கண்ட நுட்பத்தைக் கேளாதே ஒடுக ஊரோடு மாறு. - 'ஊருடன் ஒத்து வாழ்தல் வேண்டும் என்பது கருத்து. அடைந்தவர்க்கும், துறவியர்க்கும் உதவுதலும், கற்று நன்மை யென நுட்பமாகத் தெளிந்த ஒன்றைக் கைவிடாமையும் வேண்டும் என்பதும் சொல்லப்பட்டது."ஒடுக ஊரோடு மாறு’ என்பது பழமொழி. 116 117. தலைமை கருதுபவரை அழிக்க வேண்டும்.

மலைமேலே வளர்ந்திருக்கும் மூங்கிலையும், தம் அழகி னாலே தோற்று அழியச் செய்யும் மென்மையான தோள்களை உடையவளே! தமக்குத் தலைமையான ஒரு நிலைமை இருக்க வேண்டும் என்று கருதுகின்ற ஆணவத் தன்மை உடையவர் களை அரசனானவன், தன்னுைைடய பிற சூழ்நிலைகளின் காரணமாகச் சமாதானப்படுத்தி வைத்துக் கொள்வதானது, ஒரே அறையினுள் பாம்புடன் கூடி வாழும் பரிதாப நிலைமை போன்றதாகும்.

தலைமை கருதும் தகையாரை வேந்தன் நிலைமையால் நேர்செய் திருத்தல்--மலைமிசைக் காம்பனுக்கும் மென்தோளாய்! அஃதன்றோ

ஓரறையுள் பாம்போடு உடனுறையும் ஆறு. அத்தகையோரைப் பகையாகக் கருதி அழித்துவிடுதலே அரசன் தன்னைப் பேணிக்கொள்வதற்குச் செய்ய வேண்டிய செயலாகும் என்பது கருத்து. ஒர் அறையுள் பாம்போடு உடனுறையுமாறு’ என்பது பழமொழி.'குடத்துள்பாம்போடு உடனுறைந்தற்று' எனவும் இப்பழமொழிவழங்கும். IZ. 118. மாற்ற அரிது மனம் .

நேர்மையான வழியல்லாமல், குணமற்ற ஒன்றை ஒருவர் தம் உள்ளத்திலே கொண்டிருந்தால், அத்தகையவரை மீண்டும் அந்தத் தவறான எண்ணத்தினின்றும் தெளிவித்தல்,பெரியார்க் குங்கூட இயலாத ஒன்றாகும். கூர்மையான நுண்பொருளின் கேள்வி யினால் அறிவு உடையவர்களுக்கே என்றாலும், அவர் எண்ணியதையே பறையானது. ஒலிக்கும் என்பதை அறிக.

நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால், பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே,