பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

63



கொடுப்பவர் பலராயினும், வருபவர் குறிப்பறிந்து,அவர் கேளாததன் முன்பே அவர் கருதி வந்ததைக் கொடுத்து உதவுவதேசிறந்தகொடையாகும் என்பது கருத்து:"கடிஞையில் கல்லிடுவார் இல் என்பது பழமொழி.கடிஞையில்கல்இடுவார் மிகவும் கொடியவர் என்பதாம். - 126 127. உடனே பகையை ஒழிக்க வேண்டும் -

மின்னலின் ஒளியைப்போல ஒளி நில்ைப்பெற்றதாகி, மூங்கில் போல அமைவுடன் விளங்கும் அழகிய தோள்களை உடையவளே!ஒரு பாத்திரத்தின் உள்ளேயிருந்து கடித்துவிட்டு ஒடும்பாம்பின்பல்லைப்பிடுங்கநினைப்பவர் எவருமே இல்லை. அதனை அது செய்வதற்கு முன் அவர்களே அதன் விஷத்தால் செத்து விடுவார்கள். அதனால், மிகவும் பகைமை கொண்டு முற்படத் தம்மை நலிந்து எழுந்தவர்களை, அப்போதே அடக் காது,பின்னர் அடக்குவோம் என்றுசோம்பிஇருத்தல் அறிவற்ற தன்மையேயாகும்.

முன்நலிந்து ஆற்ற முரண்கொண்டு எழுந்தோரைப்

பின்நலிதும் என்றிருத்தல் பேதைமையே--

- * மின்னின்று

காம்பன்ன தோளி கலத்தில், கடித்தோடும்

பாம்பின்பல் கொள்வாரோ இல். பகையை அடியோடுமுதலிலேயே அழித்துவிடுவதுதான் அறிவுடைமை. பின்னர் பார்த்துக்கொள்வோம் எனக் காலங் கடத்துவது அறிவற்ற தன்மை என்பது கருத்து.'கடித்தோடும் பாம்பின்பல் கொள்வாரோ இல் என்பது பழமொழிகலத்தில் கடித்துவிட்டு ஒடும் பாம்பை அடித்துக் கொல்வதே நல்லது; அதுபோலக் குறும்பு செய்யும் பகைவரையும் அழித்திடுக என்பதும் ஆகும். - - 127 128. மன்னன் விரும்புவதை விரும்பாமை

இடப்படும் தவளக் குடையினைக் கொண்ட தேரினை

உடையவர்கள் மன்னர்கள்.அவர்கள் எமக்கு இதுபொருந்தும்’ என்று எண்ணிமிகவும் விரும்புகின்ற ஒரு பொருளை, அவரைச் சேர்ந்து வாழ்பவர்கள் எவரும் விரும்புதல் கூடாது. அவர்கள், தாமும் விருப்பங்கொண்டு கொஞ்சமும் ஆராயாம்ல் தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் முயலுதல் மிகவும் ஆபத்தானதாகும். அது கடிய விலங்குகளைத் தாமே கூவித் தம்மிடத்தே வரவிடுவதைப் போன்றதாகும்.