பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

65



தீமை எவ்வளவுதான் மறைக்கப் பட்டாலும், வெளிப் பட்டுத் தோன்றி அதனைச் செய்தவர்க்குப் பழி பாவங்களைக் கொண்டு வந்து விடும்.அதனால், அனைவரும் தீயன செய்யாது வாழவேண்டும் என்பது கருத்து.ஆம்பல்-அல்லி'கணையினும் கூறியவாம் கண் என்பது பழமொழி, கண் பார்வையானது அம்பினும் கூர்மையாக ஊடுருவிச்செல்வது என்பது கருத்து.130 131. இன்ப துன்பம் இல்லை என்பவர்

'மறுமை இன்பம் துன்பம் என்பதொன்று இருக்கிறதோ? மனத்திலே தோன்றியவற்றை எல்லாம் பெற்று இன்புறுகின்ற வழியையே செய்து வாழுங்கள் இப்படிச் சொல்வார் சிலர். இவர்கள் நறுமணமுள்ள நெய்யிலே இட்டுச் செய்த சுவையான அடையினை எடுத்து எறிந்துவிட்டுக்கண்ணை மூடிக்கொண்டு செங்கல்லை உண்ணும் தீயவர்களுக்குச் சமானமானவர்கள்.

மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம் பெறுமாறு செய்ம்மின் என்பாரே--நறுநெய்யுள் கட்டி அடையக் களைவித்துக் கண்சொரீஇ இட்டிகை தீற்று பவர்.

மக்களுக்குத் தீய உபதேசங்கள் செய்பவர்கள் மிகவும் கொடியவர்கள் என்பது கருத்து. கட்டு அடை - பாகு பெய்த அடையுமாம், இட்டிகை -செங்கல்; கண் சொரீஇ இட்டிகை தீற்றுபவர் என்பது பழமொழி. - 131 132. குறிப்பால் குணம் அறியலாம்

எவரிடத்தும் கண்டவான கூறுபாடுகளே அவர்களைப் பற்றிய முடிவினை நாம் செய்து கொள்வதற்கு உரிய காரணங்க ளாக அமையும் இபரிய உலைப்பாத்திரத்தினுள்ளே பெய்த அரிசியை அந்த அரிசி வெந்தமை அறிவதற்கு, ஒர் அகப்பையாலே எடுத்துக் கண்டு உணரலாம். அதுபோலவே, எவரிடத்தும் அவரவர் செயல்களாகக் கண்டவற்றைக் கொண் டே அவரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். பேருலையுள் பெய்த அரிசியை வெந்தமை ஓர்மூழை யாலே உணர்ந்தாங்கு--யார்கண்ணும் கண்டதனால் காண்டலே வேண்டுமாம், யார்கண்ணும், கண்டது காரணமா மாறு. -

}

செயலைக் கொண்டே மனிதர் மதிப்பிடப்படுவதனால், யாவரும் மறந்தும் பிழைபட்ட செயல்களிலே மனஞ் செலுத்தக்