பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பழமொழி நானூறு மூலமும் உரையும்



கூடாதென்பது கருத்து.மூழை-அகப்பை.‘கண்டது காரணமா மாறு’ என்பது பழமொழி. . 132 133. பிறர் தவறு கூறலாகாது

அழகிய குளிர்ந்த நீர்வளத்தினையுடைய புகார்நாட்டிலே, விளைநிலங்கள் இன்னின்னார்க்கு இவ்வளவு உளவென்று குறித் துக் காண்பதற்கு விரும்பிய அரசன், மக்களை அழைத்து அதுபற்றி விசாரித்தான். அப்போது, சான்றோன் ஒருவன், பிற னொருவன் தன் வலிமையால் அபகரித்துக் கொண்டு அநுப வித்து வருகிற ஒரு நிலத்தைப் பற்றித்தான் அறிந்திருந்தும், அத னைச் சொல்வதற்குநாணங் கொண்டு மறைத்துநின்றான்.ஆக வே, தன் கண்ணினாற் கண்டதேயானாலும் அதனால் வரும்பின் விளைவுகளை ஆராய்ந்து பார்த்தே சொல்லவேண்டும்.

பூந்தண் புனற்புகார்ப் பூமிகுறி காண்டற்கு வேந்தன் வினாயினான் மாந்தரைச்--சான்றவன் கொண்டதனை நாணி மறைத்தலால், தன் கண்ணிற் கண்டது.உம் எண்ணிச் சொலல். காண்பவற்றினை நன்கு ஆராயமல் வெளிப்படச் சொல்வது கூடாது என்பது கருத்து. ‘கண்ணிற் கண்டது.உம் எண்ணிச் சொலல்’ என்பது பழமொழி. 133 134. கயவரிடம் இரகசியம் சொல்லக் கூடாது

மழைமேகத்தினைப்போலக்கருமையாகவிளங்கும் கூந்த லையுடைய, பொன்வளை அணிந்தவளே! அன்புபடத் தம்முடன் நட்புக்கொண்டுநடப்பவர்களுள்ளும்,தாம் கேட்ட ஒரு செய்தி யைப் பிறருக்குச் சொல்லி ஆராயாது போகின்ற வர்களாக ஒருவ ருமே இல்லாதிருக்கின்றனர். அதனால் சான்றோர்கள் இரகசியமான செய்திகளைக் கயமைக் குணம் உடையவர்களுக்கு ஒரு போதும் சொல்லவே மாட்டார்கள். நயவர நட்டொழுகு வாரும் தாம்கேட்டது உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை; புயல்அமை கூந்தற் பொலந்தொடி சான்றோர் கயவர்க்கு உரையார் மறை. - நண்பர்களே இரகசியங்களை வெளிப்படுத்தும்போது, கயவர் கள் எவ்வளவுதூரம் அதனைப் பகிங்கரப்படுத்தி விடு வார்கள்! அதனால், அவரிடத்து ஒருபோதும்இரகசியங்களைச் சொல்ல வேண்டாம் என்பது கருத்து. கயவர்க்கு உரையார் மறை” என்பது பழமொழி. - 134