பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

பழமொழி நானூறு மூலமும் உரையும்



யவளே! போர் இல்லாத சமயத்திலே வீரமாகப் பேசுபவர்கள் என்றாலும்,அவர்கள் பேச்சைநம்பி, அவர்கள்பகைவருக்கு ஏற்ற வலிமையுடையவராக இல்லாவிட்டால், அவரைப் பகைவர் மேல் சென்று போரிடுக’ என விடுத்தல் அப்படி விடுத்த மன்ன னுக்கே முடிவில் துன்பந்தருவதாகும்.அப்படிச்செய்வது, கல்லு டன் தன் கையைத் தானே மோதிக் கொள்வதுபோன்றதாகும்.

அமர்நின்ற போழ்தின்கண் ஆற்றுவாரேனும் நிகரின்றி மேல் விடுதல் ஏதம்--நிகரின்றி வில்லொடு நேரொத்த புருவத்தாய்! அஃதன் கல்லொடு கையெறியு மாறு.

எதிர்த்த வலியற்றாரைப் பகைவர் அழிப்பதுடன் ஏவிய மன்னனையும் அழித்து விடுவார்கள் என்பது கருத்து. “கல்லொடு கையெறியுமாறு’ என்பது பழமொழி. கல்லைக் கையில் அடித்தால் கைதான் நோவு கொள்ளும் என்பது தெரிந்ததே. - 137 138. நம்மால் உயர்த்தப்பட்டவர் -

மென்மையானதும்,மேன்மையான மாலை தரித்ததுமான மூங்கில் போன்ற தோள்களை உடையவளே! கன்னத்திலே அடக்கிக் கொண்ட நீரைக் குடிக்கவும் செய்யலாம்: அல்லது துப்பிவிடவும் செய்யலாம். அது போலவே, தம்மிடம் ஏவல் செய்பவரை வலிமையுடையவராகச் செய்தவர்கள் அவர்களை அழித்தாலும் அழிக்கலாம். உயர்த்தினாலும் உயர்த்தலாம்.அது அவர்களாலே முடியும். இதற்கு,மெல்ல ஆராய்கின்ற ஒர் அறிவுத் திறமை எதுவுமே வேண்டுவதில்லை.

வழிபட்டவரை வலியராச் செய்தார் அழிப்பினும ஆக்கினும் ஆகும்--விழுத்தக்க பையமர் மாலைப் பணைத்தோளாய்! பாத்தறிவென் மெல்லக் கவுட்கொண்ட நீர்? தம்மால் உயர்த்தப்பட்டவரானாலும், அவர் தமக்கு மாறுபட்டவிடத்து ஆராயாமல் அழித்துவிடுவதே அரசநெறி என்பது கருத்து. கவுட்கொண்ட நீர் என்பது பழமொழி. 138 139. குடியைக் கண்டதும் மகிழ்வான்

தம்முடன் ஒத்த தகுதியற்ற பகைவரைத் தாமே எதிர்த்து அழிக்க முடியாதவராயிருக்கலாம். அத்தகையவரும், அவர்க ளோடு பகைகொண்ட பிறர் சொல்லும் இகழ்ச்சியான சொற்.