பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

பழமொழி நானூறு மூலமும் உரையும்



போரிலேஈடுபடவில்லை.அவனைப்போலத்தம்நண்பர்களுக்கு ஆபத்துக் காலத்தில் உதவாமல், அவரை அழிய விட்டுவிட்டுப்/ பின்,அவர் ஆன்மா சாந்தியடைக என்று பெருந்தவம் செய்பவர். உண் மை நண்பர்கள் ஆக மாட்டார்கள். அவர் செயல், திருவிழாப் பார்க்க வந்த குழந்தையை விழா முடியும்வரை தோளிலேற்றிக்காட்டாதிருந்த ஒரு தகப்பன்,விழா முடிந்தபிறகு தோளில் ஏற்றிச் சுமந்து செல்வதைப் போன்றதாகும். -

பாப்புக் கொடியாற்குப் பான்மேனி யான்போலத் தாக்கியமருள் தலைப்பெய்யார்-போக்கி வழியராய் நட்டார்க்கு மாதவம் செய்வாரே கழிவிழாத் தோளேற்று வார். -

ஆபத்தில் உதவாத நண்பர் நண்பராகார் கழிவிழாத் தோளேற்று வார்’ என்பது பழமொழி. 141 142. பெரியவரைத் தாழ்த்த நினைத்தல்

மிகவும் சிறிதாகவும் எளிமையுடையதாகவுமே தோன்றி னாலும், குளிர்ச்சியான மலையின் மேலுள்ள கல்லினைக் கிள்ளிக், கைவலியில்லாமல் தப்பியவர் எவருமே இலர். ஆதலால், முதன்மையாய் மிகுந்த பொருள் உடையவராகி, மிகவும் மதிக்கப்பட்ட செல்வாக்கும் உள்ளவர்களை, வறுமை யாக்கிவிட முயல் வோம்’ என்று ஒருவன் சொல்லுதல், அவனுக்கே கேடாக வந்து முடியும்.

மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை ஒற்கப் படமுயறும் என்றால் இழுக்காகும் நற்கெளி தாகிவிடினும், நளிர்வரைமேல் கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல். பிறருடைய செல்வமும்,செல்வாக்கும் கண்டு,பொறாமை யினாலே அவரை அழிப்பேன்’ எனக் கறுவுதல் தவறு. அது அப்படி நினைத்தவர்க்கே தீங்காக முடியும். 'கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல் என்பது பழமொழி. 142 143. பாடங் கேட்டுப் படித்தல் -

'உண்ணுதற்கு இனிமையாயிருக்கும் இனிதான தண்ணிர் இந்தக் கிணற்றைத் தவிர வேறு எங்குமே கிடையாது' என்று கருதும் கிணற்றினுள்ளேயிருக்கும்.தவளை அதனைப் போல, அறிவுடையோர் என்றும் ஆகமாட்டார்கள்.நூல்க்ளை முழுவ துமாகப் பகல் எல்லாம் வெறுப்பில்லாமல் இனிதாகப் படித்து