பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பழமொழி நானூறு ԾՔo(Քա 2-6»պա

ஒன்றைக் கற்குந்தொறும், தான் கல்லாதவன் என்று கருதி, அதனைக் கற்கும், வழியினை நினைத்து இரங்கி மனம் ஒருமைப்பட அது ஒன்றையே சிந்தித்து, வருந்தியாயினும் அந்த ஒன்றை அறிய முற்படவேண்டும்.இப்படியாவதனால், புதிதாக ஒவ்வொன் றையும் கற்குந்தொறும் தான் அதனை முன்னர் கல்லாத தன்மையே தோன்றும் என்க.

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக் கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி உற்றொன்று சிந்தித்து உழன்றொன்று அறியுமேல் கற்றொறுந்தான் கல்லாத வாறு. - 'கல்வி கரையில’ என்பதை உணர்ந்து, செருக்கின்றி நாளும் கற்றலிலே மனஞ் செலுத்த வேண்டும் என்பது கருத்து 'கற்றொ றுந்தான் கல்லாத வாறு’ என்பது பழமொழி. 'அறிதோறு அறியாமை கண்டற்றால்’ என்பதும் இது. 145 146. படியாதவனின் அறிவாலும் பயனில்லை

நற்குணம் உடையவளே! முதலிலே கேள்வி என ஒன்று எழாதிருந்தால் அதற்கான ஒரு விடையும் எழுதுவதில்லை. முதலில் உள்ளத்திலே ஒரு கனவு தோன்றாமற் போனால் எந்தவொரு செயலும் பின் நிகழ்வதுமில்லை. அதனால், படித்தவர் கள் முன்னிலையிலே விளக்கிச் சொல்லும்போது சொற்சோர்வு பட்டுப் போவதனால், நூற்களைக் கல்லாத ஒருவன் தன் இயற் கையறிவால் கண்ட சிறந்த நுட்பங்களும் நுட்பங்களாக மதிக்கப்படுவதுமில்லை.

கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன் சொல்லுங்கால் சோர்வு படுதலால்--நல்லாய்! வினாமுந் துறாத உரையில்லை; இல்லை கனாமுந் துறாத வினை. . இயற்கையறிவு இருந்தாலும் கல்வியறிவு இருந்தாலன்றி அது சிறப்பதில்லை என்பது கருத்து. வினாமுந் துறாத உரையில்லை. கனா முந்துறாத வினையில்லை. இவை

இரண்டும் பழமொழிகள். - 146 147. கீழோர்பால் பொருளை ஒப்பித்தல்

தனக்கு ஒரு போக்கிடம் இல்லாத கடலானது, நீர்த்

துளிகளைத் துரவிக் கொண்டிருக்கும். அலைகள் கரையைப் பொருதுகின்ற கழிகளையுடைய குளிர்ந்த கடற்கரைப் பகுதி

t