பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

பழமொழி நானூறு மூலமும் உரையும்



தருமன் பாரதப் போரில், அசுவத்தாம ஹத என்று சொன்னதாகவரும் சம்பவம் இங்கு காட்டப்பெற்றது.பகையை யாது செய்தும் அழிப்பது ராஜ தருமம் என்பது கருத்து. 'குடிகெட வந்தால் அடிகெட மன்றி விடல்’ என்பது பழ மொழி. - - 153 154. தீயவனுக்கு வழங்க வேண்டாம்

அடக்கம் இல்லாத உள்ளத்தை உடையவன் ஆகிய ஒருவன், அவனுடைய நடத்தையிலும் தூய்மையுடையவன் அல்லாத வனாக இருப்பான். உடைமையாகிய பெரிய செல்வத்தால் வரும் உயர்ந்த சிறப்புக்களை எல்லாம் அத்தகைய ஒருவன்பால் வைப்பது தகாது. அது குரங்கின் கையிலே கொள்ளியைக் கொடுத்து அனுப்புவது போன்ற அறியாமையான செயலேயாகும். *

உடைப்பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை அடப்பமில் உள்ளத்தன் ஆகி - நடக்கையின் ஒள்ளியன் அல்லானமேல் வைத்தல், குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல். - -

குரங்கின் கையிலே கொள்ளியைக் கொடுத்து அனுப்பினால், அது ஊர் முழுவதையும் சுட்டுப் பொசுக்கி விடும். அதுபோலத் தீயவனுக்கு அரசன் பொருள்களை வழங்கினால், பலர் அதனால் துன்பம் அடைவார்கள்.‘குரங்கின் கைக் கொள்ளி கொடுத்து விடல் என்பது பழமொழி. 154 155. நீசருள் பண்புடையார் தோன்றார் *

மிகவும் மரங்கள் செறிந்திருக்கிற சோலைகளையுடைய மலை நாடனே குரங்கு இனங்களினுள்ளே எந்தக் காலத்திலும் அழகான முகத்தை உடையது இருந்ததே இல்லை.அதுபோலவே, வழிவழியாகத் தீய குணங்கள் பெருக வந்து கொண்டிருக்கும் கீழ்த்தரமான குடிகளுக்குள்ளே, விரிவாக ஒருவர் ஆராய்ந்த காலத்தும், பண்புடையவராக எவருமே காணப்படுவதில்லை.

நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம் பரந்தொருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார் மரம்பயில சோலை மலைநாட! என்றும் குரங்கினுள் நன்முகத்த தில். பண்புடைமை, சிறந்த உயர்குடிப் பிறத்தலாலேயே அமை வது கீழ்மைக் குணமுடைய குடியினரிலே பண்புடைமை