பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

77



உடையவரைக் 576TGa முடியாது. குரங்கினுள் நன்முகத்த இல் என்பது பழமொழி, iss 156. இரப்பார்க்கு உதவாத பொருள் f

கண் குருட்ானால், அவர் தூங்கினாலும் விழித்திருந் தாலும் பயன் ஒன்று தான். அவர் எதையும் காணமாட்டார். அதுபோலவே, தம் நாவினாலே ஒரு பொருளைத் தருக என்று கேட்டவர்களது குறையினைக் கேட்டு அறிந்தும், தம்முடைய செல்வத்தினை மாட்சியமைப்படப்பூட்டிக் காப்பவர்கள், பிற தீவினைகளுக்கு அஞ்சினாலென்ன, அஞ்சாவிட்டால்தான் என்ன? அந்த ஒரு தீவினையே அவர்களுக்குக்கேடாக முடிந்துவிடும் நாவின் இரந்தார் குறையறிந்து தாமுடைய மாவினை மாணப் பொதிகிற்பார் - தீவினை அஞ்சிலென் அஞ்சா விடிலென், குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கால் என்? ஈயாதவனிடம் பொருளிருப்பது குருடன்ருகே அழகிய பொருள்கள் இருப்பதுபோலப் பயனற்றது என்பது கருத்து. 'குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கால் என்? என்பது பழமொழி. . 156 157. பணக்காரனுக்கு விருந்து . . குருவியானது தொடையை அறுத்த அளவிலே, குடர் சரிந்து விழுந்து விடும் என்பது நடைமுறையாகும். அதனால், மிகவும் பெரிய செல்வம் உடையவர்கள் வறுமையாளர் களிடத்திலே செல்லும் விருந்தினர்களாகப் போகவேண்டாம். தம் தகுதிக்குமீறி அவர்கள் இவர்களுக்கு விருந்து செய்வதற்குப் படுகின்ற வருத்தம் மிகவும் அதிகமாயிருக்கும். இருந்தாலும், செல்பவர் நிறைவு அடையவும் முடியாது.

நல்கூர்ந்தவர்க்கு நனிபெரியர் ஆயினார் செல் விருந்தாகிச் செலவேண்டா -- ஒல்வது இறந்தவர் செய்யும் வருத்தம், குருவி குறங்கறுப்பச் சோரும் குடர். வறியவர், செல்வர் விருந்தாக வந்தபோது என்னதான் கஷ்டப்பட்டு விருந்து செய்தாலும், அதனால் செல்ப்வர்கள் திருப்திஅடைந்து மனநிறைவுகொள்ளப்போவதில்லை.ஆகவே, அது செய்யவேண்டாம் என்பது கருத்து.'குருவி குறங்கறுப்பச் சோரும் குடர்' என்பது பழமொழி. - 157