பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

பழமொழி நானூறு மூலமும் உரையும்



158. படியாமலே வரும் அறிவு

கரிகாற் பெருவளத்தானிடம் இரு முதியவர்கள் ஒரு வழக்கினைத் தீர்த்துக்கொள்ள வந்தனர். அவனுடைய இளமையைக் கண்டதும், இவன் இளமைப் பருவத்தான்; சொல்லும் வழக்கிலே முடிவினைக் காண முடியாதவன் என்று கருதினர். அதனையறிந்த அவன், நரைமயிரை முடித்தவனாகத் தன்னை முதியவன் போல ஒப்பனை செய்து கொண்டு வந்தமர்ந்து, அப்படிச்சொன்னவர்கள் மகிழுமாறு, அவர்கள் வாக்குமூலங்களைக் கேட்டு நியாயம் வழங்கினான். இதனால், குலத்துக்கு உரிய அறிவுச் செழுமை கற்று அறியாமலேயே, இயல்பாக ஒருவனுக்கு வந்துபடியும் என்று அறிதல் வேண்டும்.


உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப -- நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன்; குலவிச்சை கல்லாமற் பாகம் படும்.

'குலவிச்சைகல்லாமல் பாகம்படும் என்பது பழமொழி. விச்சை-கல்வி; வித்தை. 158

159. திருடரின் காணிக்கை

பல நாட்களும் அரசனுக்குரிய தொழில்களைச் செய்து, அவனுடைய செல்வத்தைக் களவுசெய்து உண்டுகளித்தவர்கள், அரசன் தமக்குத் துன்பஞ் செய்யாமல் இருக்கவேண்டும் என்று விரும்பியவர்களாக, அவனுக்குப் பொன் அணிகளைக் காணிக் கையாகச் கொண்டு கொடுத்துச் சென்றடைதல்,குவளைமலரை அதன் தண்டிலே உரித்த நாரினாலேயே சுட்டுவதைப் போன்றதாகும்

பன்னாள் தொழில்செய்து உடைய கவர்ந்துண்டார் இன்னாமை செய்யாமை வேண்டி இறைவர்க்குப் பொன்யாத்துக் கொண்டு புகுதல், குவளையைத் தன்னாரால் யாத்து விடல்.

அவனிடம் திருடியவற்றுள் சிறிதையே அவனுக்குக் காணிக்கையாகத் தந்து, அவன் அன்பைப்பெற முயல்வதனால், இப்படிக் கூறினார்.'குவளையைத் தன்னாரால் யாத்து விடல்’ என்பது பழமொழி. 159

160. தீவினையின் பயன்

எத்துணையோ பல்வகையான பிறப்புக்களிலும் தாம் தேடித் தொகுத்துக் கொண்டவினைப்பயன்கள், தம்மேல் வந்து