பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

பழமொழி நானூறு மூலமும் உரையும்



கையுள தாகிவிடினும், குறும்பூழ்க்குச் செய்யுளதாகு மனம். மக்கள் தொடர்ந்து பழகிவிட்ட வாழ்வுமுறைகளை மாற்றுவது அவ்வளவு எளிதன்று. என்ன செய்தாலும் அவர் களின் இயல்பான குணம் போகாது என்பது கருத்து. 'குறும் பூழ்க்குச் செய்யுளது ஆகும் மனம் என்பது பழமொழி. 166 167. நம்பிக்கைத் துரோகிகள் -

உண்மையான வழிகளிலேயே நிலைபெற்று அதனால், அரசனால் மிகவும் மதிப்புடனும் கருதப்பட்டவர்கள் கை கடந்து நின்று, அந்த அரசன் சினங்கொள்ளும் செயல்களைச் செய்து நடப்பவர்களாகி, வஞ்சனையையும் மேற்கொண்டவர் களாக, அந்த அரசனையே கொன்றார்களானால், அவர்கள், பனையைத் தன்மேலேயே விழுமாறு வெட்டியவர்கள் போன்ற வர்களாவர்.

மெய்ம்மையே நின்று மிகநோக்கப் பட்டவர் கைமேலே நின்று கறுப்பன செய்தொழுகிப் பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன்றார்--

- குறைப்பர் தம்மேலே வீழப் பனை.

அந்த அரசன் அழிய, நம்பிக்கைத் துரோகிகளான அவர்கள் அழிவிற்கும் அதுவே காரணமாகிவிடும் என்பது கருத்து. "குறைப்பர் தம் மேலே வீழப் பனை’ என்பது பழமொழி. - 167 168. உயர்ந்தோரின் சிறு குற்றம்

அளவுகடந்த தீய செயல்களையே வெகுண்டு பலநாட்கள் ச்ெய்து வந்த போதும், கீழ்மக்களிடத்திலே, அவற்றைப் பற்றிய ஒருவிதமான பழியும் தோன்றுவதில்லை. அது அவர் இயல்பு எனச் சான்றோர் ஒதுக்கிவிடுவர்.ஆனால், உயர்ந்த நிலையிலே உள்ளவர்களிடத்தே தோன்றிய குற்றமானது ஒன்றாகவே இருந் தாலுங்கூட, அது குன்றின் மேலே இட்டுவைத்த விளக்கைப்போல நெடுந்தொலைவுக்கும் தெரிந்து பழிக்கப்படுவதாக ஆகிவிடும்.

கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும் ஒன்றும் சிறியார்கண் என்றானும்--தோன்றாதாம் ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம் குன்றின்மேல் இட்ட விளக்கு. -