பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

85



களையோ, அல்லது. அதனால் வரும் பயனையோ நினைக்க மாட்டான். அது போன்றதே இவர் கொடையும் என்க. ‘கூலிக்குச் செய்துண்ணுமாறு’ என்பது பழமொழி. 172 173, நிலையாமை அறிந்து நன்னெறி நாடுக

செல்வத்தால் வரும் வளமையும், புகழும், வலிமையும், வனப்பும்,இளமையும்,குடிப்பிறப்பும் இவை எல்லாம் உள்ளன வாக மதித்து, அதற்கு அஞ்சித் தன் செயலைக் கைவிட்டுப் போகும் தன்மை, கூற்றத்திற்குக் கிடையாது. அதன் பிடியினின்றும் தப்பிப் பிழைத்துப் போனவர்களாக அறியப்படுபவர்கள் ஒருவருமே இலர். . -

வளமையும் தேசும் வலியும் வனப்பும் இளமையும் இற்பிறப்பும் எல்லாம்--உளவாய் மதித்தஞ்சி மாறுமஃ தின்மையால், கூற்றம் குதித்துய்ந்து அறிவாரோ இல். இந்த மதிப்புக்கள் எல்லாம் சாவினை வெல்லும் சக்தி உடையன அன்று. அதனால், நல்ல நெறியிலே சென்று சிறப்பு டையவராக முயல்க என்பது கருத்து.' கூற்றம் குதித்து உய்ந்து அறிவாரோ இல்’ என்பது பழமொழி. 173 174, பெரியார் பகை கூடாது - .

. நோன்புகள் பலவற்றையும்மேற்கொண்டபெருமையினை உடையவர்களும், கூற்றத்தை அதன்பின்னேநின்று கைகொட்டி வலிய அழைப்பவர்கள் அல்லர்.இந்த உண்மையைப்போற்றாது, சீதையைக் கவர்ந்ததால் கூற்றத்தை வலிய அழைத்துக்கொண்டு, அரக்கனான இராவணனும் போரிலே இறந்து பேர்னான். அதனால், மிகவும் பெரியவர்களுடைய பகைமையை எவருமே விரும்பிமேற்கொள்ளாமலிருப்பார்களாக -

ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க போற்றாது கொண்டரக்கன் போரில் அகப்பட்டான் நோற்ற பெருமை உடையாரும், கூற்றம் புறங்கொம்மை கொட்டினார் இல்.

"பகைமையைவேண்டிக்கொள்வதுதான்.தவறு.அதுவாக நேர்ந்தால்,போரிட்டுஅறிவது சிறப்பே அன்றி இழிவு ஆகாது” என்பது கருத்து கூற்றம் புறங்கொம்மை கொட்டினார் இல்’ என்பது பழமொழி. 174

f 4