பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

பழமொழி நானூறு மூலமும் உரையும்



175. பொறாது பொறுத்தல்

செய்யத்தகாத காரியம் ஒன்றைச் செய்தவரை, அவர் தனக்கு மிகவும் வேண்டியவரேயானாலும்,அரசன் அதற்கேற்பத் தண்டித்து விடவேண்டும், அப்படியில்லாமல், வெளியே பொறாதவன் போலக் காட்டிக்கொண்டு கடிந்து பேசிவிட்டுப், பின், பொறுத்து மன்னிப்பது தவறாகும். அது மனம் பொறாத செய்கைகளை மேலும் செய்து கொள்ளுதலைப் போல, வேதனை தருவதாகவே முடியும்.அதுதான், முதுகின் மேல் எழுந்த கட்டிபோலச்சதாதுன்பந்தருவதென்று சொல்லப்படும்.

உறாஅவகையது செய்தாரை வேந்தன் பொறாஅன் போலப் பொறுத்தால்-பொறாஅமை மேன்மேலும் செய்துவிடுதல் அதுவன்றோ கூன்மேல் எழுந்த குரு. - 'அரசன் தனக்கு வேண்டியவர் கருதி நீதி கோணுதல், அவனுக்கு வேதனையாகவே முடியும் என்பது கருத்து. ‘கூன் மேல் எழுந்த குரு' என்பது பழமொழி கூன் முதுகு கூன் விழுந்த முதுகுமாம், குரு-கட்டி 175 176. பெரியார் வருந்தக் கேடு வரும்

அடும்பின் கொடிகளும் பூக்களும் நிறைந்து அழகுசெய்து கொண்டிருக்கும் கடற்கரைச் சோலைகளுக்கு உரியவனே! நெடுங்காலமாகவே தம்மோடுதொடர்புகொண்டுவந்தவர்கள், தீயதன்மையிலே இருப்பக் கண்டு, பெரியோர்கள் தம் உள்ளம் நடுக்கமுற்றுப்பெரிதும் வருந்துவார்கள்.அவர்கள் வருந்தியதும் கொடுஞ்செயலை உடைய அவனுடைய குடும்பமே அழிந்து போகும். -

நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர் அடும்பார் அணிகானற் சேர்ப்ப கெடுமே கொடும்பாடு உடையான் குடி.

சான்றோர்களின் மனம் வருந்துமாறு செய்வது ஒருவனு

டைய குடும்பத்தை வேருடன் அழித்துவிடும் என்பது கருத்து கெடுமே கொடும்பாடு உடையான் குடி என்பது பழமொழி. 176

177. உளம் கலவாத நண்பர்கள்

மொட்டுக்கள் தம் பிணிப்பவிழ்ந்து மலர்ந்து கொண்டி ருக்கின்றமாலையானது, விளங்கிக்கொண்டிருக்கும் மார்பினை