பக்கம்:பழைய கணக்கு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பெரியாரை சாப்பிட வைத்தவர்

திசய மனிதர் திரு ஜி. டி. நாயுடு 1959-ம் ஆண்டு லண்டனுக்குப் போயிருந்போது நான் விகடனில் அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைப் படித்த நாயுடு அவர்கள் லண்டனிலிருந்து எனக்குப் பாராட்டுக் கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.

“இங்கு சங்கதிகளைப் பத்திரிகைகளில் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் சாமர்த்தியமாகவும் பெருமையாகவும் யாரும் விரும்பத்தக்க வகையில் வருணித்துக் கட்டுரைகள் எழுதுகின்றர்கள். ஆனால் அவர்களும் கூடத் தங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய முறையில் நீங்கள் எழுதியிருப்பதைக் கண்டு மிக ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்தேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். திரு நாயுடு அவர்களின் அந்தக் கடிதத்தை இன்னமும் (ஆறு வீடுகள் மாற்றிய பிறகும் தொலைந்து போகாமல்) பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்கிறேன். உற்சாகம் குன்றும் போதெல்லாம் அந்தக் கடிதத்தையும் அதைப் போன்ற இன்னும் பல கடிதங்களையும் எடுத்துப் படித்துப் புத்துணர்ச்சியும் புதுவேகமும் பெறுவேன்.

ஜி.டி. நாயுடு லண்டனிலிருந்து திரும்பி வந்ததும் ஒருநாள் சென்னைக்கு வந்திருந்தார். என்னை நேரில் சந்திக்க வேண்டுமென்று போனில் கூப்பிட்டார். காஸ்மாபாலிடன் கிளப்புக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு பப்பாளிப்பழங்கள் கொடுத்தனுப்பினார். அது முதல் எங்களுக்கிடையே ஏற்பட்ட நெருக்கம் வளர்பிறையாக வளர்ந்து உயர் நட்பாக மலர்ந்தது.

நான் எப்போது கோவைக்குப் போனாலும் நாயுடுவைச் சந்திக்காமல் திரும்புவதில்லை. அதேபோல் நாயுடு அவர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/107&oldid=1146094" இலிருந்து மீள்விக்கப்பட்டது