பக்கம்:பழைய கணக்கு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கிங்காங் சிந்திய ரத்தம்

ரு நாள் என் நண்பர் சின்ன அண்ணாமலை என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்தார். எப்போதும் போல் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டார்.

“சாவி, இன்றைக்கு நாம் மதுரை போகிறோம். இந்தாங்க நூறு ரூபாய். இதைச் செலவுக்கு வீட்டில் கொடுத்துட்டுப் புறப்படுங்க” என்றார்.

“என்ன விஷயம்?”

“அங்கே கிங்காங்-தாராசிங் சண்டை நடக்கப் போகுது. நடத்தப் போகிறவர்கள் செட்டிநாட்டைச் சேர்ந்த என் நண்பர்கள். நாம ரெண்டு பேரும் குஸ்தி சம்பந்தமான விளம்பர வேலைகளைக் கவனிக்கப் போகிறோம். மாசம் ஐந்நூறு ரூபாய் சம்பளம்” என்றார்.

நூறு ரூபாயை வாங்கி விட்டில் கொடுத்துவிட்டு, மாற்றுச் சட்டை இல்லாத நிலையில் மதுரைக்குக் கிளம்பி விட்டேன்.

அங்கே போய் ‘மல்யுத்த மலர்’ என்று ஒரு பத்திரிகை தொடங்கினேன். வாரத்தில் மூன்று நாட்கள் குஸ்தி நடக்கும். அந்த மூன்று நாட்கள் மட்டுமே பத்திரிகை வரும். ஸ்டேடியத்திலேயே அச்சிடும் பதினைந்தாயிரம் பிரதிகளும் விற்றுப் போகும்.

வெவ்வேறு நாடுகளிலிருந்து மல்யுத்த வீரர்கள் வந்திருந்தாா்கள. தமுக்கம் மைதானத்தில் ஸ்டேடியம் அமைத்தோம்.சீனாவிலிருந்து வந்திருந்த வாங் பக்லி என்ற குஸ்தி வீரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/11&oldid=1145657" இலிருந்து மீள்விக்கப்பட்டது