பக்கம்:பழைய கணக்கு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

அது முடிந்ததும் ஏவி. எம். எங்களைத் தனியாகத் தம் அறையில் சந்தித்துப் பேசினார்.

“இங்கே காரைக்குடியில் என்னுடைய ராஜாஜி அச்சகம் இருக்கிறது, அதைப் போய்ப் பாருங்கள். அங்கே உள்ள அச்சு இயந்திரங்களில் எது ‘வெள்ளி மணி'க்குத் தேவைப்படும் என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அதை உடனே லாரியில் ஏற்றிச் சென்னைக்கு அனுப்பி வைக்கிறேன்.” என்றார்.

வெள்ளிமணியின் வளர்ச்சியில் ஏவி. மெய்யப்பன் முழு அக்கறையுடன் பொருளாதார ரீதியாக உதவ முடிவு செய்திருக்கிறார் என்பதை நான் அவருடைய பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன்.

பகல் இரண்டு மணிக்கு மேல் கல்கியுடன் நானும் சி. அ. வும் ராஜாஜி பிரஸ் பார்ப்பதற்குப் புறப்பட்டுச் சென்றோம். அப்போது கல்கி என்னிடம் சொன்னர்: “சாவி, இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் நான் வெள்ளிமணிக்கு வந்துவிடப் போகிறேன். ஆமாம்; பத்திரிகையை இன்னும் பிரமாதமாகக் கொண்டு வர வேண்டும்.”

எனக்கு ஒரு கணம் ஒன்றும் தோன்றவில்லை. கல்கியின் இந்த வார்த்தைகள் என்னை உணர்ச்சி வெள்ளத்தில் திணற அடித்து விட்டன. அதைச் சமாளித்துக் கொண்டு “அப்படியா! அந்த நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்” என்றேன்.

சில நாட்களுக்கு முன் கல்கியை விட்டு நான் விலகியது, அவர் கோபப்பட்டது. இப்போது அவரே வெள்ளி மணியில் சேர முன் வந்திருப்பது — இதையெல்லாம் எண்ணிய போது மனதுக்குள் சந்தோஷம் பொங்கியது.

சென்னை திரும்பியதுமே மௌண்ட் ரோடுக்குப் பக்கத்தில் அச்சகம் வைப்பதற்கான இடத்தைப் பிடித்து விட்டோம். அதற்கடுத்த வாரமே அச்சு இயந்திரம் லாரியில் வந்து இறங்கி விட்டது.

ஒரு நாள் கல்கி என்னைக் கூப்பிட்டனுப்பினார். “நானும் டி. கே. சி.யும் சின்ன அண்ணாமலையை அழைத்துக் கொண்டு சாந்தி நிகேதன் போகிறோம். திரும்பி வர புத்துப் பதினைந்து நாட்கள் ஆகும். இப்போது ஏவி. எம். சென்னையில் இருக்கிறார். அவரிடம் எல்லாம் சொல்லியிருக்கிறேன். இந்த வருடம் கல்கி தீபாவளி மலர் கிடையாது. ஆகையால் வெள்ளி மணி தீபாவளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/112&oldid=1146099" இலிருந்து மீள்விக்கப்பட்டது