பக்கம்:பழைய கணக்கு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நீறு பூத்த நட்பு

பெருந்தலைவர். காமராஜூக்கு அடுத்தபடியாக அத்தனை நெருக்கமாக நான் பழகிய வேறொரு அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிதான்.

ஆனால் இந்த இரு உறவிலும் நுட்பமான வித்தியாசம் உண்டு. காமராஜிடம் எனக்கிருந்த உறவு ஒரு சங்கீத வித்வானுக்கும், அந்த வித்வானயே சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ரசிக விசிறிக்கும் உள்ள உறவைப் போன்றது.

கலைஞரிடம் ஏற்பட்டது நகைச்சுவை அடிப்படையில், இலக்கிய உணர்வு அடிப்படையில் எழுந்த நட்பு. நுனிக் கரும்பில் தொடங்கி அடிக்கரும்பு வரை சுவைக்கும் போது கூடிச் செல்லும் இனிப்பைப் போல் அது வளர்ந்தது. பல கூட்டங்களில், பல சந்திப்புகளில், பல பயணங்களில், பல நேரங்களில் நாங்கள் இருவரும் காதலர்கள் போல் இந்த நட்பை வளர்த்துக் கொண்டோம்.

இப்போதும் அந்த நட்பு அழிந்து போகவில்லை. இருவருமே சந்தித்துப் பேசிக் கொண்டால் தீர்ந்து போகக் கூடிய, மிக மிக அற்பமான காரணங்களால் நீறு பூத்த நெருப்பாக இருந்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.

இதில் வேடிக்கை என்னவென்றல், எங்களுக்குள்ளே ஏதோ தீராத பகை மூண்டு ஒருவருக்கொருவர் பேச்சு வார்த்தையற்று நிற்பது போல் சிலர் கற்பனை செய்து கொண்டிருப்பதுதான்.

அவருடைய எழுத்தாற்றல், பேச்சுத் திறமை, நகைச்சுவை உணர்வு இம்மூன்றிலும் எனக்கு எப்போதுமே ஒரு மயக்கம் உண்டு. சுயநலத்தின் அடிப்படையில் நான் அந்த நட்பை வளர்த்துக் கொள்ளவில்லை, காமராஜோடு பழகிய போதும் சரி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/115&oldid=1146103" இலிருந்து மீள்விக்கப்பட்டது