பக்கம்:பழைய கணக்கு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145

டயபடீஸ்காரர்கள் அரிசிச் சோறு அதிகம் சாப்பிடக் கூடாது என்பதால் அவர்களுக்கு அடிக்கடி பசி எடுத்து விடுகிறது. கூழ் டயபடீஸுக்கு நல்லது அல்ல என்றாலும், கெடுதலும் அல்ல என்று டயாபடீஸ் டாக்டர் நிபுணர் திரு விசுவநாதன் சொல்கிறர். எனவே பசியைத் தவிர்க்க இது ரொம்பவும் பயன்படுவதால் கூழைக் கட்டாயமாக வேண்டிச் சாப்பிடுகின்றேன். விரும்பிச் சாப்பிட்டது முதல் நிலை. வருந்திச் சாப்பிட்டது இரண்டாவது நிலை, தெரிந்து சாப்பிடுவது இப்போது மூன்றாவது நிலை.

இந்த மூன்று கால கட்டங்களிலும் பல மாற்றங்கள் இருந்தாலும் ஒன்றில் மட்டும் மாற்றமே இல்லே. அது கூழின் ருசி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/146&oldid=1146138" இலிருந்து மீள்விக்கப்பட்டது