பக்கம்:பழைய கணக்கு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

“என்ன ஸார் இது? உங்க பேர் மறந்துவிடும் என்பதற்காகவா?” என்று ஜோக் அடிக்கிறாா்கள்.

இரண்டும் கெட்டான் வயதில் புரியாத் தனமாகச் செய்து விட்ட இந்த அசட்டுத்தனம் ஆயுள் முழுதும் நிரந்தரமாகி விட்டதை எண்ணும் போதெல்லம் வெட்கம் பிடுங்கித் தின்கிறது. இந்த எழுத்துக்களை யாரும் பார்க்காதபடி நான் முழுக்கை சட்டை போட்டு மறைத்துவிட முடியும். ஆனால் நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. அதை ஏன் மறைக்க வேண்டும்?

அறியாப் பருவத்தில் தெரியாத்தனமாகப் பச்சை குத்திக் கொண்டது பற்றி எண்ணும் போதெல்லாம் அந்தக் குறத்தியின் முகம்தான் என் கண் முன் தோன்றிச் சிரிக்கிறது! லல்லல்லல்லா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/153&oldid=1146148" இலிருந்து மீள்விக்கப்பட்டது