பக்கம்:பழைய கணக்கு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

“சரி. அதையும்தான் பார்த்து விடலாமே. பையனே அக்கறையோடு கேட்கிறானே! நாம் அவனைப் படிக்க வைக்கவில்லை என்ற பழி நமக்கு வேண்டாம். நாளைக்கே அனுப்பிவையுங்கள். என் அக்கா அங்கே இருக்கிறாள். அவள் பார்த்துக் கொள்வான். அக்காள் புருஷனுக்கு ஒரு கடிதம் எழுதிப் பையனிடம் கொடுத்தனுப்புங்கள். அவன் சாப்பாட்டுச் செலவுக்குப் பதிலாக இங்கிருந்து அரிசி மூட்டை அனுப்பி விடலாம்” என்றார்.

அப்பா ராத்திரியெல்லாம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். பிறகு என்னை அழைத்து, “ஆரணிக்கு அனுப்புகிறேன். அங்கே போய் ஒழுங்காகப் படிப்பாயா? பழையபடி ஊர் சுற்றுவாயா?” என்று கேட்டார்.

“ஒழுங்காய்ப் படிக்கிறேன்” என்றேன்.

“அப்படியானால் விடியற்காலம் புறப்படத் தயாராயிரு. நாளை சனிக்கிழமை. சனி விடியல் பயணத்துக்கு ரொம்ப நல்ல நேரம்” என்றார்.

விடியற்காலம் ஐந்து மணிக்கு அம்மா தயிர் சாதம் கட்டிக் கொடுத்தார். அப்பா இரண்டு ரூபாயை என்னிடம் கொடுத்து, “இதைப் பத்திரமாக வைத்துக் கொள். அவசியமாகச் செலவு செய்ய வேண்டியிருந்தால் செலவழி. வீண் செலவு செய்யாதே! நான் அடுத்த வாரம் ஆரணிக்கு வந்து உன்னை போர்டு ஹைஸ்கூலில் சேர்த்து விடுகிறேன். பிரம்மதேசம் சுப்பிரமணிய அய்யர்தான் ஹெட்மாஸ்டர். அவர் எனக்குத் தெரிந்தவர்தான். அவரிடம் சொல்லி உன்னை முதல் ஃபாரத்தில் சேர்த்து விடுகிறேன்” என்றார்.

நல்ல கோடை மழை பெய்து குளம் குட்டைகள் எல்லாம் நிரம்பியிருந்த நேரம். குளிர்ந்த வேளையில் அம்மா கொடுத்த கட்டுச் சாதத்துடன் ஆரணிக்குப் புறப்பட்டு விட்டேன்.

நீர்த் தேக்கங்களில் தவளைகள் முறை வைத்துக் கத்திக் கொண்டிருந்தன. லேசான இருள் கவ்வியிருந்தது.

அப்பா என்ன வழி அனுப்புவதற்காக இரண்டு மைல் கூடவே நடந்து வந்தார். நிறைய புத்திமதிகள் சொல்லிக் கொண்டே வந்தார். வழியில் இருந்த நீர்த்தேக்கத்தின் அருகில் என்னைச் சாப்பிடச் சொன்னார். கட்டுச்சாத மூட்டையை அவிழ்த்து தயிர் சாதத்தைத் தீர்த்துக் கட்டினேன். தேக்கத்தில் கையைக் கழுவிக் கொண்டேன். “போய் வா, ஜாக்கிரதை” என்று அப்பா வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/155&oldid=1146150" இலிருந்து மீள்விக்கப்பட்டது