பக்கம்:பழைய கணக்கு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155

அனுப்ப வேகமாக நடந்து எட்டு மணிக்குள் ஆரணியை அடைந்து விட்டேன்.

என்னைக் கண்டதும் என் பெரியம்மாவின் கணவருக்கு ஒரே ஆச்சரியம்!

“ஏண்டா நீ மட்டும் தனியாகவா வந்தாய்? வீட்டில் சொல்லாமல் வந்து விட்டாயா?” என்று கேட்டார். அடிக்கடி வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் போவது என் வழக்கமாதலால் அவர் அப்படிக் கேட்டார்.

அப்பா கொடுத்த கடிதத்தை நான் அவரிடம் நீட்டினேன். அதைப் படித்துப் பார்த்து விட்டு, “அப்படியா சங்கதி? பலே! இங்கே படிக்க வந்திருக்கிறாயா? வா, வா ரொம்ப நல்ல காரியம். கடைசியாக உன் அப்பா உன்னைப் படிக்க வைப்பது என்று முடிவு செய்து விட்டாராக்கும்” என்று சிரித்தார்.

பெரியம்மாவுக்கும் அவள் கணவருக்கும் என் மீது அன்பும் அக்கறையும் அதிகம்.

சில தினங்களுக்குள்ளாகவே அப்பாவும், அம்மாவும் கிராமத்தைக் காலி செய்து கொண்டு நிலங்களைக் குத்தகைக்கு விட்டு விட்டு ஆரணிக்கே குடி வந்து விட்டார்கள்.

போர்டு ஹைஸ்கூலில் எனக்குத் தனியாகப் பரீட்சை வைத்து என்னை ஃபஸ்ட் ஃபாரத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

என் வகுப்பில் படித்த கிருஷ்ணாஜி, ராமு என்ற இரு மாணவர்களும் எனக்கு நெருங்கிய தோழர்கள் ஆயினர். மூவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல் பிரியமாகப் பழகினோம். சேர்ந்தே ஊர் சுற்றினோம். சேர்ந்தே நாடகங்களுக்குப் போனோம். சேர்ந்தே சைக்கிள் விடப் பழகிக் கொண்டோம். சேர்ந்தே கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டோம்!

அப்பா ஆரணியில் ராமாயண உபந்தியாசம் செய்து அதில் வரும் வரும்படியைக் கொண்டு குடும்பத்தை நடத்தினார். எனக்குப் பள்ளிக்கூடச் சம்பளம் கட்டினார். நான் சைக்கிள் விடுவதையும் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதையும் பற்றிப் பல பேர் அப்பாவிடம் போய் அடிக்கடி புகார் சொல்லிக் கொண்டிருந்தனர். நான் தோளுக்கு மிஞ்சிய தோழனாகி விட்டதால் அப்பா என்னை முன்போல் அடித்துத் துன்புறுத்துவதை நிறுத்தி விட்டார். ஒரு நாள் கோபமாக என்னை அழைத்து, “நீ இந்த மாதிரியெல்லாம் செய்து கொண்டிருந்தால் உன்னை வீட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/156&oldid=1146151" இலிருந்து மீள்விக்கப்பட்டது