பக்கம்:பழைய கணக்கு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

விட்டே துரத்தி விடுவேன்” என்று மட்டும் கடுமையாக் எச்சரித்தார்.

“நான் சரியாய்த்தான் படிக்கிறேன்” என்று அப்பாவிடம் சொன்ன போதும் அதை அவர் நம்பவில்லை.

என் எதிரில் நிற்காதே போ” என்று கர்ஜித்தார்.

ஒரு வருடம் படித்து முடிந்ததும் பரீட்சை ரிஸல்ட் வந்தது. நான் கிருஷ்ணாஜி, ராமு மூவரும் மட்டும் நல்ல மார்க்குகள் வாங்கிப் பாஸ் செய்திருந்தோம். கணக்கில் எனக்கு நூற்றுக்கு நூற்றைந்து மார்க் கிடைத்தது.

அந்தப் பள்ளிக்கூடத்து ஆசிரியர்கள் அத்தனை பேரும் அப்பாவின் உபந்நியாசத்துக்குத் தவறாமல் வருகிறவர்கள்.

நான் நல்ல மார்க்குகள் வாங்கியிருந்தது பற்றி அவர்களுக்கே ஆச்சரியம் தாங்கவில்லை.

என் தந்தையிடம் போய், “சாஸ்திரிகளே! உங்க பையன் பாஸ். ரொம்ப நல்ல மார்க்குகள் வாங்கியிருக்கிறான். வகுப்பிலேயே முதலாவதாகத் தேறியிருக்கிறான்” என்று பெருமை பொங்கச் சொல்லியிருக்கிறார்கள். அப்பா அதை நம்பவில்லை. என் கிளாஸ் டீச்சர் சந்தான கோபாலகிருஷ்ணய்யரே சொன்ன பிறகுதான் நம்பினார்.

ஊர் சுற்றிக் கொண்டிருந்தாலும், சைக்கிள் விடப் பழகினாலும் நானும் என் தோழர்களும் படிப்பிலே ஊக்கமாக இருக்கிறோம் என்பதை எங்கள் கிளாஸ் டீச்சர் சந்தான கோபாலகிருஷ்ணய்யர் நன்கு அறிந்திருந்தார். எங்கள் செக்ஷ்னுக்கு அவர்தான் கிளாஸ் டீச்சர். தம்முடைய செக்ஷன் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்பதற்காக எங்களிடம் கணக்கு உட்பட முக்கிய கேள்வித் தாள்களை முன்கூட்டியே தந்து, இதை நன்றாகப் படித்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று சூசகமாகச் சொல்லி விட்டார். முன்கூட்டியே அந்தக் கேள்விகள் கிடைத்து விட்டதால் நாங்கள் மூவருமே அந்தக் கேள்விகளுக்குச் சரியான விடைகளைத் தயாரித்து வைத்துக் கொண்டோம், பரீட்சையில் அவர் கொடுத்த கேள்விகளே வந்ததால் சிறப்பாக எழுதி, நல்ல மார்க்குகள் வாங்கி விட்டோம். இதனால் எங்கள் செக்ஷ்னுக்கு நல்ல பெயர் கிட்டியது. என் தந்தையின் மதிப்பீட்டில் நானும் உயர்ந்து விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/157&oldid=1146152" இலிருந்து மீள்விக்கப்பட்டது