பக்கம்:பழைய கணக்கு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“வந்தேன் ஹிரண்ய கசிபு”

புரிசை நடேசத் தம்பிரானுடைய தெருக் கூத்து அப்போது ரொம்பப் பிரபலம். அந்தக் கலைஞர் அடிக்கடி பாதுகா பட்டாபிஷேகம் அல்லது ஹிரண்யவாசாப் கதைகளைத் தெருக்கூத்தாக நடத்துவார். நிறையக் கூட்டம் சேரும். அதில் நிச்சயம் நானும் இருப்பேன். பிரகலாதனுடைய கதையைத்தான் ஹிரண்ய வாசாப் என்று அறிவிப்பார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாது ஆனால் அவருடைய நடையும், குரலும், பாவனையும். ஜிகினா பளபளக்கும் உடைகளும் அப்போது என்னை ஆச்சரியப்பட வைத்தன.

எல்லோரும் சேர்ந்து பிரகலாத சரித்திரம் தெருக் கூத்து நடத்தினால் என்ன என்று ஒரு சமயம் எங்களுக்கு திடீர் ஆசை வந்தது.

தூண்டி விட்டவன் கிருஷ்ணமூர்த்திதான். ஆளில்லாத லைப்ரரி ஆரம்பிக்க ‘டொனேஷன்’ கொடுத்தானே, அதே கிருஷ்ணமூர்த்தி.

தெருக் கூத்து நடத்தலாம் என்பது அவன் ஆலோசனை; பிரகலாத சரித்திரம் போடலாம் என்பது என் ஐடியா.

விஷயம் வெளியே தெரிந்து விட்டால் பெரியவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் உள்ளுர இருந்தது. யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக ஏற்பாடுகளைச செய்ய ஆரம்பித்தோம்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் எல்லாரும் மாட்டுக் கொட்டகை ஒன்றில் புகுந்து கொண்டு பரபரப்போடு ஏற்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/158&oldid=1147336" இலிருந்து மீள்விக்கப்பட்டது