பக்கம்:பழைய கணக்கு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159

ஒன்று மட்டும் நினைவுக்கு வந்தது.

மேக்கப் போட்டுக் கொண்டு விட்டால் அப்புறம் சாப்பிடுவதற்கு வெளியே போக முடியாது; விஷயம் தெரிந்து விடும். அதனால் ஒவ்வொருவராகப் போய்ச் சாப்பிட்டு விட்டுத் திரும்பி வரும்போது மேக்கப் சாமான்களோடு வருவது என்றும் முடிவு செய்தோம். மஞ்சள், குங்குமம், பவுடர் ஒவ்வொன்றையும் ஒவ்வொருத்தர் கொண்டு வருவது என்று தீர்மானித்தோம்.

நான்தான் ஹிரண்ய கசிபு. லைப்ரரி கிருஷ்ணமூர்த்தி ஹிரண்யனுடைய மனைவி லீலாவதியாக நடிக்கப் புடவையைச் சுற்றிக் கொண்டு தயாரானான்.

விபூதியெல்லாம் பூசிக்கொண்டு சண்ட மார்க்கன் என்ற குருவாக வேஷம் போட்டுக் கொண்டவன் பெயர் ஞாபகம் இல்லை. எருமை மாட்டில் ஏறிக் கொண்டு வயல்காட்டுக்கு தினமும் போய் வரும் இன்னொரு பையனை நரசிம்மனாக்கினோம்.

தூண் கூட ‘செலக்ட்’ பண்ணியாகி விட்டது. அதன் பின் குல்தான் நரசிம்மன் பதுங்கிக் கொள்வார். தூணை நான் கதையால் ஓங்கி அடித்ததும் வெங்காய வெடிவெடிக்கும். உடனே நரசிம்ம மூர்த்தி பிரத்யட்சமாக வேண்டும்.

வெங்காய வெடி தயாராக இருந்தது. எவ்வளவோ தடவை புரிசை தம்பிரான் நாடகத்தைப் பார்த்து ரசித்திருந்தாலும் எங்கள் யாருக்குமே வசனம் ஞாபகமில்லை. ஒட்டுமொத்தமாக பிரகலாதன் கதை தெரியும். அதை வைத்துச் சமாளித்து விடலாம் என்று ஒரு அசட்டுத் தைரியம்.

நான்தான் மிருதங்கம் வாசிக்க வேண்டும். நானே ‘தொம் தொம்’ என்று மிருதங்கத்தைச் சப்தம் செய்துவிட்டு, “வந்தேன், வந்தேன் ஹிரண்ய கசிபு” என்று போய் நிற்க வேண்டும். மிருதங்கம் ஏகமாய் சுருதி இறங்கிக் கிடந்தது.

ஆறுமணி ஆன போது எங்களுக்குக் கூட பஜனை கோயில் மிருதங்கம் மாதிரியே சுருதி இறங்கிப் போய் விட்டது.

ஒரு வழியாய் கூத்தை ஆரம்பிக்கலாம் என்று எல்லாரும் தீர்மானித்த போதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. எல்லா ஏற்பாடுகளையும் ரகசியமாகச் செய்து வந்ததால், வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/160&oldid=1146156" இலிருந்து மீள்விக்கப்பட்டது