பக்கம்:பழைய கணக்கு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



“அடிக்கடி காணாமல் போய்க் கொண்டிருடா”

வில்லிவாக்கத்திலிருந்து தினமும் ரயிலில் பொம்பூருக்குப் போய்ப் படித்துக் கொண்டிருந்தேன். எட்டாம் வகுப்பு வரை தமிழில் படித்துக் கொண்டிருந்த எனக்கு பெரம்பூர் ஹைஸ்கூலுக்கு மாறியதும், ஹிஸ்டரி, ஜாக்ரபி எல்லாமே இங்கிலீஷில் படிக்க வேண்டியிருந்தது. ஆங்கிலம் புரியாத காரணத்தால் படிப்பில் ஒரு வெறுப்பே வந்து விட்டது. இதனால் அடிக்கடி வகுப்புக்கு மட்டம் அடித்து விட்டு சென்னைக்குப் போய் விடுவேன். காலாண்டுப் பரீட்சை நெருங்கிய போது என் அந்தராத்மா, “நண்பனே, நீ பரீட்சையில் பெயிலாகி விடுவாய். ஆகையால் பரீட்சையில் கலந்து கொள்ளாதே” என்று புத்திமதி கூறவே, வீட்டுக்குச் சொல்லாமல் அப்பா கொடுத்த ஸ்கூல் ஃபீஸ் பணத்தை எடுத்துக் கொண்டு திருச்சி, தஞ்சாவுர், மானாமதுரை வரை மனம் போனபடியெல்லாம் சுற்றி விட்டுக் கடைசியாக திருப்பாதிரிப்புலியூருக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்த அளவுக்குத்தான் கையில் பணம் இருந்தது.

திருப்பாதிரிப்புலியூர் கோவிலை அடுத்த வேத பாடசாலையில் என் அத்தை மகன் வேதம் படித்துக் கொண்டிருந்தான். நான் அவனைத் தேடிப் போன சமயம் அவன் விடுமுறையில் சொந்த ஊருக்குப் போய்விட்டிருந்ததால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளானேன். கையிலிருந்த காசும் தீர்ந்து விட்டது. வில்லிவாக்கத்துக்கே திரும்பிச் செல்ல நினைத்தாலும் போக முடியாத நிலை. பாடசாலைத் திண்ணையிலேயே பட்டினியோடு இரண்டு நாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/162&oldid=1159890" இலிருந்து மீள்விக்கப்பட்டது