பக்கம்:பழைய கணக்கு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

கதர்தான் அணிய வேண்டும்” என்றார். அன்றே ஸில்க் ஜிப்பாவைக் கழற்றி எறிந்து விட்டு கதர்ச் சட்டை வாங்கிப் போட்டுக் கொண்டேன். அப்போது கதர் கட்டத் தொடங்கியவன் அப்புறம் ரொம்பக் காலம் (1966 வரை) கதரை விடவே இல்லை.

ல்கி அவர்கள் நீண்ட காலம் முக்கால் கை கதர்ச் சட்டை தான் அணிந்து கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் வாசன், மாலி, தேவன் இவர்களெல்லாருமே முக்கால் கை கதர்ச் சட்டை தான் அணிவார்கள். கல்கி ஆனந்த விகடனை விட்டு விலகி சொந்தப் பத்திரிகை தொடங்கிய பிறகு கூட முக்கால் கைச் சட்டைதான் அணிந்து கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாள் முக்கால் கையை மாற்றி முழுக்கை ஜிப்பா போடத் தொடங்கி விட்டார். அப்போது நான் கல்கியில் உதவி ஆசிரியராக இருந்தேன். எனக்கும் மற்ற உதவி ஆசிரியர்களுக்கும் கல்கி ஏன் ஜிப்பாவுக்கு மாறினர் என்பது புரியவில்லை. நாங்கள் அவரிடமே இதுபற்றிக் கேட்டபோது அவர் சிரித்துக் கொண்டே சொன்னர்:

“நான் என்னமோ ராஜாஜியையும், டி. கே. சியையும் என் சட்டைப்பையில் வைத்திருப்பதாகப் பலர் வெளியே பேசிக் கொள்கிறார்களாம். என் சட்டையில் இருப்பதோ ஒரே ஒரு பாக்கெட். அவர்கள் இரண்டு பேரையும் என் ஒரே பாக்கெட்டில் வைத்தால் இடநெருக்கடி ஏற்படாதா? அதற்காகத்தான் இப்போது இரண்டு பாக்கெட் வைத்த ஜிப்பா போட்டுக் கொள்கிறேன்” என்றார்.

த்தூரில் ஒரு காங்கிரஸ் மாநாடு. நான் அந்த மாநாட்டுக்குப் போயிருந்தேன். ஒரு பக்கமாக உட்கார்ந்து குறிப்பெழுதிக் கொண்டிருந்தேன். கல்கியும் அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். “என்னைத் தாண்டி கல்கி போனபோது, குறிப்பு எடுத்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து சைகையால் என்ன எழுதுகிறாய்?” என்று கேட்டார்.

“குறிப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன்?” என்றேன்.

“அதையெல்லாம் மூடி வை. அப்புறம் சொல்கிறேன்” என்று கூறிவிட்டும் போய் விட்டார்.

பிறகு சொன்னர்: “இதோ பார், பேச்சைக் குறிப்பெடுத்து எழுதுவது தினப் பத்திரிகைகள் செய்யும் வேலை. வாரப் பத்திரிகைக்கு அந்த ‘ரிப்போர்ட்டிங்’ ஒத்து வராது. நீ பேசாமல் உட்கார்ந்து நடப்பதைக் கவனிக்க வேண்டும். உன் உள்ளத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/23&oldid=1145685" இலிருந்து மீள்விக்கப்பட்டது