பக்கம்:பழைய கணக்கு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘பாலிட்டி’ தெரியுமா உனக்கு?

காஞ்சிப் பெரியவர்கள், திருப்பதி போகும் வழியில் ஒரு சின்ன கிராமத்தில் முகாமிட்டிருந்தார்கள். மெயின் சாலையிலிருந்து வயல்களுக்கிடையே உள்ள கப்பி ரோடு வழியாக அந்த கிராமத்தை அடைய வேண்டும். நான் அப்போது ‘தினமணி கதிரி’ல் இருந்தேன். சுவாமிகளைப் பார்ப்பதற்காக நானும் எம். கே. என்று அழைக்கப்படும் திரு எம். கிருஷ்ணசாமியும் (இப்போது லூகாஸ் டி. வி. எஸ்.) திரு டி. கே. தியாகராஜனும் போயிருந்தோம். எங்களைப் பார்த்ததும், சுவாமிகள் கையால் சைகை காட்டி எதிரே உட்காரச் சொன்னர்கள்.

பிறகு என்னைப் பார்த்து “எக்ஸ்பிரஸில் ‘கீ’ போஸ்ட்டில் இருக்கியோ?” என்று கேட்டுக் கொண்டே சாவியால் திறப்பது போல் அபிநயத்துக் காட்டினர். நான் பதில் ஏதும் சொல்லாமல் பரவசத்தோடு அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பெரியவர்கள் ரொம்ப உற்சாகத்தோடு காணப்பட்டார்கள்.

“நீ அமோகமாக இருப்பே. க்ஷேமமாய் இருப்பே?” என்று வாயார வாழ்த்தினர்.

சிறிது நேரம் மெளனம்.

“பாலிட்டி என்றால் என்ன தெரியுமோ?” என்றார் சட்டென்று.

எனக்குத் தெரியவில்லை, தயங்கிவிட்டு, “ ‘பாலிடிக்ஸ்’ என்றால் தெரியும்” என்றேன்.

“நான் கேட்பது பாலிடிக்ஸ் இல்லை, பாலிட்டி” என்றார்.

விழித்தேன், அல்லது விழித்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/25&oldid=1145692" இலிருந்து மீள்விக்கப்பட்டது