பக்கம்:பழைய கணக்கு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

“மனித சமுதாயத்துக்கு மொத்தமாகச் செய்யப்படுகிற சேவைக்கு பாலிட்டி” என்று சொல்லலாம். ‘பாலிட்டி’ என்று தலைப்பிட்டு நீ உன் பத்திரிகையில் வாரா வாரம் ‘ரிலிஜனை’ப் பற்றி எழுது” என்றார், ஏறக்குறைய ஒரு கட்டளை மாதிரி.

“மதம், பக்தி இது பற்றியெல்லாம் பத்திரிகையில் எப்போதாவது வரலாமே தவிர, வாரா வாரம் எழுதுவது கூடாது என்ற கொள்கை உடையவன் நான்” என்றேன்.

சுவாமிகள் என்னிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. சற்று வியப்புடன், “ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“ரிலிஜன் எழுதினால் பத்திரிகை விற்பனையாவதில்லை. சீரியஸாக எழுதினால் ஸர்க்குலேஷன் உயராது” என்றேன்.

“பரவாயில்லை; நீ எழுது. விற்பனையாகும்.” என்றார்.

எனக்கு என் கொள்கையிலிருந்து விலகிப் போக விருப்பமில்லை.

“பெரியவா மன்னிக்க வேண்டும். என் பத்திரிகையில் நான் ரிலிஜனைப் பற்றி எழுதுவதாக இல்லை. விற்பனை பாதிக்கும்”

நான் பிடிவாதமாகச் சொன்னாலும் பெரியவர்கள் என்னிடம் ஒரு குழந்தையிடம் காட்டும் அன்பைக் காட்டிப் பேசினர்.

“அப்படியா நினைக்கிறாய்?” என்று இழுத்தாற் போல் விட்டு விட்டார்.

அப்புறம் மூவரும் பெரியவர்களை நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். காரில் ஏறி கப்பி ரோடில் போய்க் கொண்டிருந்தபோது சுவாமிகள் முகாமிலிருந்த பிராமணர் ஒருவர் எங்களைத் துரத்திக் கொண்டு சைக்கிளில் வருவதைக் கவனித்தோம். அவர் எங்களிடம் ஏதோ சொல்லத்தான் வருகிறர் என்பதை ஊகித்து காரை நிறுத்தச் சொன்னுாம்.

“பெரியவர் உங்களைக் கூப்பிடுகிறார்” என்றார் அந்த மடத்து ஆள் மூச்சு வாங்க,

எதற்காகக் கூப்பிடுகிறார் என்று மூவரும் யோசித்துக் கொண்டே போனோம்.

“ரிலிஜன், கடவுள் பற்றியெல்லாம் எழுதினால் பத்திரிகை விற்காது என்று சொன்னாயே, இப்போது தினமணி பேப்பரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/26&oldid=1145695" இலிருந்து மீள்விக்கப்பட்டது