பக்கம்:பழைய கணக்கு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பெரியார் எனக்கு வழிகாட்டி

பெரியார் ஈ. வெ. ரா. அவர்களின் பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பிராமணர்களை எதிர்த்து அவர் கடுமையாகப் பேசும் போது, நான் பிராமண வகுப்பில் பிறந்தவன் என்ற முறையில் எனக்குக் கோபம் வருவதுண்டு. ஆனாலும் அவர் பேச்சில் இழையோடும் நகைச்சுவையை நான் மிகவும் ரசிப்பேன். அவர் கூட்டங்களுக்குப் போய் ஒரு மூலையில் ஒதுங்கி, பேச்சை நின்று கவனிப்பேன்.

ஆனந்தவிகடனில் ஈ. வெ. ரா. அவர்களைப் பேட்டி கண்டு எழுதுவதற்காக ஒருமுறை திருச்சி பெரியார் மாளிகைக்குப் போயிருந்தேன். பல்வேறு விஷயங்கள் குறித்து பெரியார் தமது தீர்க்கமான கருத்துக்களை வெளியிட்டார். அப்போது அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இப்போதும் என் நினைவில் இருக்கிறது.

“கல்லூரி அட்மிஷன், அரசாங்க வேலை இவற்றுக்கு வகுப்புவாரி விகிதாசார ஒதுக்கீடு வேண்டும் என்று தீவிரமாக வாதிடுகிறீர்களே, அது ஏன்? தகுதியின் அடிப்படையில் இவை அமைவது நல்லது இல்லையா? தகுதியுள்ளவன் முன்னுக்கு வருவதில் உங்களுக்கென்ன ஆட்சேபனை?” என்று கேட்டேன்.

“தகுதி என்ன தகுதி; வெங்காயம் நாலு தடவை திருப்பித் திருப்பி செஞ்சா எந்தத் தொழிலும் பழக்கமாயிட்டுப் போகுது. ஒரு முட்டாள் பத்து வருஷம் ஒரே தொழிலைச் செய்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/28&oldid=1145697" இலிருந்து மீள்விக்கப்பட்டது