பக்கம்:பழைய கணக்கு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



லாக் அப்பில் மசாலா தோசை

1942 ஆகஸ்ட் எட்டு, வெள்ளையனே வெளியேறு என்று குரல் கொடுத்த காந்திஜி பம்பாயில் கைது செய்யப்பட்டு எங்கேயோ அழைத்துச் செல்லப்பட்டார். அவரை அடுத்து நேருஜி, படேல், ஆஸாத், காமராஜ், சத்தியமூர்த்தி எல்லாருமே கைது செய்யப்பட்டார்கள். நாடு முழுவதும் ஒரே கொந்தளிப்பு அதே சமயம் இரண்டாம் உலகப் போரும் நடந்து கொண்டிருந்ததால் ஊரடங்குச் சட்டம், இருட்டடிப்பு என்று நாடே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது.

காந்திஜி கைதானதும் அங்கங்கே தலைமறைவாகியிருந்த காங்கிரஸ்காரர்கள், மகாத்மா இதைச் செய்யச் சொன்னார். அதைச் செய்யச் சொன்னர் என்று எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

நான் அப்போது வேலைவெட்டி ஏதுமின்றி ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். நாட்டுப்பற்று மட்டுமே நெஞ்சில் நிறைந்திருந்தது. காந்திஜி தண்டவாளத்தைப் பெயர்க்கச் சொன்னார். தந்திக் கம்பிகளை வெட்டச் சொன்னார். தபாலாபீஸைக் கொளுத்தச் சொன்னார் என்று வெளியாகிக் கொண்டிருந்தன. பாரத தேவி ராமரத்னம் ரகசியமாக எனக்குச் சில துண்டுப் பிரசுரங்களை அனுப்பி அவற்றை மற்றவர்களுக்கு விநியோகிக்கும்படிச் சொல்லி அனுப்பினார்.

ஏற்கனவே உணர்ச்சி வசப்பட்டிருந்த எனக்கு இது மேலும் வெறியூட்டியது. தேச விடுதலைக்கு எதையாவது செய்தாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/31&oldid=1145700" இலிருந்து மீள்விக்கப்பட்டது