பக்கம்:பழைய கணக்கு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மறுத்துச் சொன்னபோது...

தில்லான மோகனம்பாள், இவர்கள் சந்தித்தால், சினிமா விமர்சனம் போன்ற பல புதிய பகுதிகள் வெளிவந்து கொண்டிந்த விகடனின் பொற்காலம் அது.

ஒவ்வொரு வாரமும் தலையங்கம் முதற்கொண்டு எல்லாச் சிறப்பு அம்சங்களையும் பற்றி உதவி ஆசிரியர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வதற்காக திரு வாசன் அவர்கள் விகடன் அலுவலகத்துக்கு நாள்தோறும் வந்து போவார். அப்புறம் உதவி ஆசிரியர்கள் எழுதிக் கொடுப்பவற்றைப் படித்துப் பார்த்து மாற்றி அமைக்க வேண்டியிருந்தால் மாற்றி அமைத்து, திருத்தி, மறுபடியும் திருத்தி மெருகேற்றி அனுப்பி வைப்பார்.

ஒவ்வொரு வாரமும் அந்த வாரத் தலையங்கம் என்ன என்பதை முடிவு செய்வதற்காக ‘எடிட்டோரியல் கூட்டம்’ கூடுவதுண்டு. நாரதர் சீனிவாச ராவ், பி. ஸ்ரீ. சிவம், ஸ்ரீதர், கொத்தமங்கலம் சுப்பு உட்பட கிட்டத்தட்ட பத்துப் பதினேந்து பேர் கலந்து கொள்வார்கள்.

பத்திரிகைக்காரர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியம் இவ்வளவு கொடுத்துத் தீர வேண்டும் என்று ‘வேஜ் போர்ட்’ அப்போது நிர்ணயம் செய்திருந்தது. திரு வாசன் அதை அவ்வளவாக வரவேற்கவில்லை.

எழுத்தாளர்கள் ‘கிரியேடிவ் பீப்பிள்’. அவர்களின் திறமை கண்டு அதற்கேற்ப எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது பத்திரிகையின் சொந்தக்காரராகத்தான் இருக்க வேண்டுமே தவிர, எங்கேயோ டில்லியில் உட்கார்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/43&oldid=1145985" இலிருந்து மீள்விக்கப்பட்டது