பக்கம்:பழைய கணக்கு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

“யூ ஆர் ரைட்” என்று கூறிய திரு வாசன் சோபாவின் கைப்பிடியில் வைத்திருந்த தமது டவலை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு சட்டென்று எழுந்து நின்றர்.

அப்போது சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் மாட்ச் நடந்து கொண்டிருந்தது, ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவிற்கும் போட்டி.

“சீனிவாச ராவ்! இந்த வாரம் தலையங்கம் கிரிக்கெட் பற்றிதான். ஆஸ்திரேலிய கங்காருவும், இந்திய யானையும் என்று ஏதாவது எழுதுவாயே! அப்படி ஒரு தலையங்கம் எழுதி கம்போஸுக்கு அனுப்பி விடு. நான் அப்புறம் வந்து பார்த்துக் கொள்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே புறப்பட்டு விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/45&oldid=1145987" இலிருந்து மீள்விக்கப்பட்டது