பக்கம்:பழைய கணக்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காமராஜ் தொடங்கி வைத்த பத்திரிகை

துமிலன் அவர்களை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். அவர் தினமணி கதிர் ஆசிரியராக இருந்த போது நான் வேலையில்லாமல் இருந்தேன். ஒருநாள் அவர் என் விட்டுக்கு வந்து அழைத்துப் போய் எனக்கு அங்கே உதவி ஆசிரியர் வேலை போட்டுத் தந்தார். ஆனால் சம்பளம்தான் ரொம்பவும் குறைச்சல். என் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்து வைக்க முடியாத சம்பளம்.

“சம்பளம் கொஞ்சம் அதிகமாக வேண்டும்” என்று சில மாதங்கள் கழித்து ஒரு நாள் அவரைக் கேட்டேன்.

“அதெல்லாம் கோயங்கா தர மாட்டார்” என்று இவரே கூறிவிட்டார். சம்பள உயர்வை அங்கே எதிர்பார்ப்பதில் பயனில்லை என்று தீர்மானமாகத் தெரிந்ததும் நான் அந்த உதவி ஆசிரியர் வேலையை விட்டு விட்டேன். அதற்குப் பிறகு வெகு காலம்வரை துமிலனைப் பார்க்கவே இல்லை. காலப்போக்கில் அவரும் கதிரிலிருந்து விலகி வேறு எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தார்.

பின்னால் நான் விகடனில் சேர்ந்து அங்கிருந்து மீண்டும் கதிர் ஆசிரியராகப் பொறுப்பேற்க இருந்த சமயத்தில் துமிலன் சும்மா இருப்பது கண்டு அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.

விகடனை விட்டு விலகு முன்பாக திரு காமராஜ் அவர்களுடன் கர்நாடக மாநிலத்திற்கு நான் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. “நீங்களும் என்னுடன் வாருங்களேன்” என்று துமிலனிடம் கூறி, என் சொந்தச் செலவில் அவரை அழைத்துச் சென்றேன். காமராஜர் கண்ணில் அவ்வப்போது அவர் படும்படியாக சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுத்தேன். சரியான வாய்ப்பு கிடைத்தபோது தலைவரிடம், இவர் ஒரு மூத்த எழுத்தாளர். துமிலன் என்ற பெயரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/46&oldid=1145988" இலிருந்து மீள்விக்கப்பட்டது