பக்கம்:பழைய கணக்கு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் இப்போது வேலை ஏதும் இல்லை. அவருக்கு நீங்கள்தான் ஏதாவது...” என்று இழுத்தேன்.

“குட்டி குட்டியா வாக்கியம் எழுதுவாரே, அவர்தானே! வடக்கே நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டுக்கெல்லாம் வருவார், விகடனில் எழுதுவார். பார்த்திருக்கேன். என்னை என்ன செய்யனுங்கறீங்க?” என்றார் காமராஜ்.

“இங்கே காங்கிரஸுக்கென்று தனியே ஒரு நல்ல பத்திரிகை இல்லை” என்று ஆரம்பித்ததும் நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை அவர் சட்டென்று புரிந்து கொண்டு, “சரி...பார்க்கலாம்” என்றார்.

சில நாட்களில் சுதந்திரச் சங்கு என்ற பெயரில் ஒரு காங்கிரஸ் பத்திரிகை ஆரம்பிப்பதென்றும் அந்தப் பத்திரிகைக்கு துமிலனை ஆசிரியராக நியமிப்பது என்றும் முடிவானது. நான், ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணய்யர், ராமண்ணு ஆகிய மூவரும் அடங்கிய ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

ஆனால் பத்திரிகை தொடங்கப் பெற்ற சில மாதங்களுக்குள்ளாகவே பெரும் நஷ்டத்துக்குள்ளாகி அதை நிறுத்த வேண்டிய கட்டம் உருவானது. நான் கதிர் ஆசிரியராகப் பொறுப்பேற்ற சில நாட்களுக்குள்ளாகவே சுதந்திரச்சங்கு நின்று போய் விட்டது.

அப்புறம் கதிரில் துமிலனை அவ்வப்போது ஏதேனும் எழுதச் சொல்லி அதன் மூலம் அவருக்கு ஓரளவு வருமானம் கிடைக்க வழி செய்யலாம் என்பது என் எண்ணம். அதை முடிந்த அளவு செயல்படுத்தியும் வந்தேன்.

துமிலன் எப்போதாவது தினமணி அலுவலகத்துக்கு ஏ. ஜி. வெங்கடாச்சாரியாரைப் பார்க்க வருவதுண்டு. அப்படியே தினமணி கதிர் எடிடோரியல் அறைக்குள்ளும் எட்டிப் பார்ப்பார். “அவர் வரும் நேரங்களில் அவரைக் காக்க வைக்காமல் உடனுக்குடன் பேசி முடித்து, மேட்டர் கொடுத்தால் வாங்கிக் கொண்டு அனுப்பி விடுங்கள். என் அறைக்குள் அவர் வராதபடி நாசூக்காகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று என் உதவியாளர்களிடம் சொல்லி வைத்திருந்தேன்.

எனது இந்தப் போக்கு பலருக்குப் புரியவில்லை. ஒருவேளை துமிலன் வருவதை நான் விரும்பவில்லை என்று அவர்கள் தவறாக எண்ணிக் கொண்டார்களோ, என்னவோ? ஆனால் நான் இப்படிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/47&oldid=1145989" இலிருந்து மீள்விக்கப்பட்டது