பக்கம்:பழைய கணக்கு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காலணாப் பத்திரிகை

ரு வழியாகக் கிராமத்தை விட்டு வெளியேறியதும் வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை ஸ்கூலில் சேர்ந்து ஒரு வருஷம் படித்தேன். பிறகு, அந்தப் பள்ளிக்கூடத்திலேயே சில மாத காலம் வாத்தியார் வேலை பார்த்து விட்டு அதையும் விட்டு விட்டேன். அப்போது ஸைன் போர்டுகள் எழுதவும் கற்றுக் கொண்டிருந்ததால் அடிக்கடி சென்னைக்குச் சென்று தெருத் தெருவாய் அலைந்து ஆர்டர் பிடித்து வருவேன். அப்படி அலையும் போது கடை முகப்புகளில் உள்ள ‘ஸைன் போர்டு’களை யெல்லாம் ஆர்வத்தோடு நுணுக்கமாகப் பார்த்துக் கொள்வேன். பல வர்ணங்களில் பல வடிவங்களில் அமைக்கப் பட்டிருந்த அந்த விளம்பர எழுத்துக்கள் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டிக் காதல் புரியும். “நாமும் ஏன் இதைப் போல எழுதக் கூடாது!” என்று ஒரு வேகம் உண்டாகும்.

மண்ணடி ராமசாமித் தெருவில் ஒரு மொட்டை மாடியை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு என் தொழிலை வியாபார முறையில் விரிவு படுத்தினேன். அந்த மாடிக்கு மாதம் ஐந்து ரூபாயோ என்னவோ வாடகை. விடிய விடியக் கண் விழித்து போர்டு எழுதிக் கொடுத்துப் பணம் வாங்கி சினிமா பார்த்த நாட்களை மறக்க முடியாது.

தினமும் காசு கொடுத்து சினிமா பார்க்க முடியாததால் ஓசிப் பாஸில் சினிமா பார்க்க ஒரு திட்டம் போட்டேன். திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை போன்ற இடங்களில் முக்கியமான இடங்களில் தட்டியில் விளம்பர போஸ்டர் ஒட்டி வைக்க வேண்டும். அதற்குப் பதிலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/52&oldid=1145994" இலிருந்து மீள்விக்கப்பட்டது