பக்கம்:பழைய கணக்கு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவி என்கிற நுணுக்கம் தெரிந்த வணிகர்,

சாவி என்கிற நகைச்சுவையாளர்

ஒவ்வொரு பழைய கணக்கும் ஒரு சினிமாக் காட்சி போல் ஒரு ஆரம்பம் — ஒரு இனிய மோதல் — ஒரு உச்ச கட்டம் — ஒரு தீர்மானம் — ஒரு முத்தாய்ப்பு என்று முடிகிறது. இதைப் பார்க்கும் போது அவர் ஏன் சினிமாவில் கை வைக்கவில்லை என்றே ஆதங்கம் தோன்றுகிறது.

சென்னைக்கு வரும் மாமாவை சினிமா தியேட்டருக்குக் கூட்டிப் போய், முதல் வரிசையில் உட்கார வைக்கிறார் இவர். ஊருக்குப் போன மாமா மருமகனின் செல்வாக்கை கிராமம் பூராவும் சொல்லி, “என்னை முதல் வரிசையில் உட்கார வச்சான்னாப் பாரேன்” என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

ஒவ்வொரு சம்பவமும் ஒரு பஞ்சதந்திரக் கதை மாதிரியான உணர்வை ஏற்படுத்துகிறது.

இப்படி டயமண்டு கல்கண்டு போல் சின்னச்சின்ன வடிவங்கள் ஒட்டு மொத்தமாய் ஒரு இனிப்புத் தோரணமாகத் தொடர்கிறது பழைய கணக்கு.

இவையனைத்தும் ‘உழைப்பே உயர்வைக் கொடுக்கும்’ என்கிற சித்தாந்தத்தைத்தான் வலியுறுத்துகிறது. Starting from the scrap என்று சொல்வார்களே, அப்படிப்பட்டவர்களுக்கு இந்தப் பழைய கணக்குகள் பயனுள்ள கணக்குகள். பயனுள்ள ஃபார்முலாக்கள்.


84, வாரன் சாலை,
சென்னை–4
கே. பாலசந்தர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/6&oldid=1146061" இலிருந்து மீள்விக்கப்பட்டது