பக்கம்:பழைய கணக்கு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பி. டி. கோயங்காவுடன்...

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் டைரக்டர் திரு பி. டி. கோயங்கா என்னைப் பார்க்க விரும்புவதாக அப்போதைய மானேஜர் திரு எஸ். வி. சுவாமி மூலம் சொல்லி அனுப்பினார்.

நான் போயிருந்தேன்.

“தினமணி கதிர் பத்திரிகைக்குப் பொறுப்பாசிரியராக இருக்கச் சம்மதமா?” என்று கேட்டார்.

“பொறுப்பாசிரியரா, அல்லது ஆசிரியர் பொறுப்பா?” என்று திருப்பிக் கேட்டேன்.

“ஏ. என். சிவராமன்தான் இப்போது ஆசிரியர்” என்று இழுத்தார் திரு பி. டி. ஜி.

“என்னை ஆசிரியராகப் போடுவதாயிருந்தால் ஒப்புக் கொள்கிறேன்” என்றேன்.

“சரி பார்க்கலாம். முதலில் வேலையை ஒப்புக் கொள்ளுங்கள்” என்றார்.

“ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஆசிரியராகத்தான் ஒப்புக் கொள்ள முடியும்” என்றேன். பல நிர்ப்பந்தங்கள் காரணமாக அவரால் வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லை. அவருடைய தர்மசங்கடமான நிலை எனக்குப் புரிந்தது. ஆனாலும் நான் விடவில்லை. ஏறத்தாழ ஒரு மாத காலம் தினமும் போய் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கடைசியில் ஒரு நாள் “எதற்காக என்னைத் தினமும் வரச் சொல்கிறீர்கள்? தங்களுக்கு இதில் ஏதேனும் சிரமம் இருந்தால் விட்டு விடலாமே!” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/60&oldid=1146002" இலிருந்து மீள்விக்கப்பட்டது