பக்கம்:பழைய கணக்கு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

“ஏம்பா?” என்றார்.

“இராத்திரியில் கண் விழித்து வேலை செய்வது அவர்களுக்குக் கஷ்டமாக இராதா?” என்று கேட்டேன்.

“அவர்கள் ஸெகண்ட் ஷோ சினிமா பார்க்கப் போனல் கண் விழிக்க மாட்டார்களா?” என்று திரும்பக் கேட்டார்.

“சினிமா பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு. வேலை செய்வது வேறு” என்றேன்.

“வேலை செய்வதில் அவர்கள் சினிமா பார்க்கிற அளவுக்கு ஆர்வம் காட்ட வேண்டும்” என்றார்.

நான் சிரித்தேன். என் சிரிப்பின் அர்த்தத்தை அவர் புரிந்து கொண்டார். வேலை செய்கிறவர்களின் கஷ்டங்களை அவர் உணராதவர் அல்ல. அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே உதவி ஆசிரியர்களுக்கும் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும் சம்பளத்தை உயர்த்திப் போடும்படி என்னிடம் சொன்னார்.

கவன் தாஸ் கோயங்காவின் உள்ளத்தைப் புரிந்து கொண்டவர்கள் வெகு சிலரே இருக்கக் கூடும். மேலாகப் பார்க்கும் போதும், பேசும் போதும் அவர் கடினமாகத் தோன்றினாலும் உள்ளத்தில் அவர் குழந்தை மாதிரி.

காமராஜர் இறந்த செய்தி கேட்டு அவர் எவ்வளவு துக்கப்பட்டார் என்பது எனக்குத் தெரியும். அன்று என் வீட்டுக்கு டெலிபோன் செய்து “கோயங்கா பேசறேன்” என்றார். “என்ன விஷயம்?” என்றேன்.

“காமராஜ் போயிட்டாரேப்பா, தெரியுமா?” என்று கேட்டார்.

“தெரியும்” என்றேன்.

எனக்கும் காமராஜருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அவர் அறிந்திருந்தார்.

“நீ போய்ப் பார்க்கவில்லையா?” என்று கேட்டார்.

“பார்த்தேன். சாயந்திரமே போய் மாலை போட்டு என் இறுதி மரியாதையைத் தெரிவித்து விட்டு வந்தேன்” என்றேன்.

“அடாடா, எப்பேர்ப்பட்ட லீடர். போய்விட்டாரே” என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருத்தப்பட்டார். அவர் குரலில் கனமான சோகம் தோய்ந்து கிடப்பதை என்னால் உணர முடிந்தது.

பி. டி. ஜிக்கு எதையுமே வேகமாகச் செய்ய வேண்டும். ஐம்பது வருடங்களில் செய்ய வேண்டிய காரியத்தை ஐந்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/62&oldid=1146004" இலிருந்து மீள்விக்கப்பட்டது