பக்கம்:பழைய கணக்கு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஜெயகாந்தன் சொன்ன பதில்

பிராம்மண வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகள் தான் ஆனந்த விகடனில் வெளியாகும் என்ற குற்றச்சாட்டு அந்த நாளில் உண்டு. 1957-ல் நான் விகடனில் சேர்ந்து பணியாற்றிய போது அந்தக் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருப்பதையும் உணர்ந்தேன். அந்தச் சூழ்நிலையை எப்படியும் மாற்றிவிட வேண்டும் என்று எண்ணினேன். நல்ல எழுத்தை யார் எழுதினாலும் அவர்களுக்கு நீட்டப்படும் முதல் ஆதரவுக்கரம் நம்முடையதாக இருக்க வேண்டும் என்று நான் எந்தப் பத்திரிகையில் பணியாற்றினாலும் கருதுபவன்.

பார்த்தசாரதி என்ற இளைஞர் அப்போது விகடன் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் என்னிடம் வந்து தூசு படிந்த புத்தகம் ஒன்றைத் தந்து, “இதில் உள்ள கதைகளைப் படித்துப் பாருங்கள். ரொம்ப நன்றாக இருக்கின்றன. மஞ்சரி ஆசிரியர் தி. ஜ. ர. முன்னுரை எழுதியிருக்கிறார்” என்று சொன்னார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘ஒரு பிடி சோறு.’ எழுதியவர் அப்போது பிரபலமாகாமல் இருந்த ஜெயகாந்தன்.

புத்தகத்தைப் புரட்டிய என் கண்ணில் ‘டிரெடில்’ என்ற கதை பட்டது. படித்தேன். அசந்து போனேன். ‘இந்த எழுத்தாளரைத் தேடிப் பிடித்து விகடனில் எழுத வைத்துவிட வேண்டும்’ என்று அன்று முதல் ஒரே குறியாக இருந்தேன்.

அப்போது ஆனந்த விகடன் நிர்வாகத்தை ஏற்றிருந்த திரு பாலு (எஸ். பாலசுப்ரமணியன்) அவர்களின் அறைக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/76&oldid=1146019" இலிருந்து மீள்விக்கப்பட்டது