பக்கம்:பழைய கணக்கு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எழுத்துச் சண்டை ஏற்படுத்திய பரபரப்பு

கல்கியின் எழுத்தில் நான் மனதைப் பறிகொடுத்தவன், அதன் பயனாக அவரை என் மானசீக குருவாகக் கொண்டவன். அவருடைய எழுத்தும், எதையும் நகைச்சுவையோடு சொல்லுகின்ற பாணியும், சரளமான நடையும் என்னைக் கவர்ந்ததன் பயனாக, அந்தப் பாதிப்பு என் எழுத்துக்களில் பிரதிபலித்தது. போகப்போக கல்கியின் நடையைப் போலவே என் எழுத்தும் அமைந்து விட்டது. அது அத்தனை ஆரோக்கியமானதல்ல என்பதை நான் அறிந்திருந்த போதிலும், ஒரு மாபெரும் எழுத்தாளரைப் போலவே நமக்கும் எழுத வருகிறதே என்கிற பெருமையில் மூழ்கிப் போயிருந்தேன்.

அவருடைய ‘வீணை பவானி’ புத்தகத்துக்கு நான் பதிப்பாளர். சின்ன அண்ணாமலைக்கு எழுதித் தந்த முன்னுரை ஒன்றைப் படித்துப் பார்த்த கல்கி அவர்கள் என்ன அழைத்து, “பேஷ் ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறாய். இதைப் படித்த போது ‘நான் இதை எப்போது எங்கே எழுதினேன்?’ என்று எனக்கே சந்தேகம் வந்து விட்டது” என்றார்.

‘விஷயமறிந்த வட்டாரத்துக்கு’ என்ற தலைப்பில் நான் ஒரு சமயம் எழுதிய நகைச்சுவைக் கட்டுரையைப் படித்த ராஜாஜி அவர்கள் என்னிடம், “நீங்க கிருஷ்ணமூர்த்தி (கல்கி) மாதிரியே எழுதரீங்க” என்று பாராட்டினார். அதை நான் கிடைத்தற்கரிய ஒரு பாராட்டாகக் கருதிப் பூரிப்படைந்தேன்.

நாளாக ஆக இது போன்று ஒருவர் பாணியைப் பின்பற்றி எழுதுவது ஓர் எழுத்தாளனின் தனித் தன்மையை அழித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/87&oldid=1146031" இலிருந்து மீள்விக்கப்பட்டது